ஜெயலலிதா மரண மர்மம்... சஸ்பென்ஸ் திரில்லர் மாதிரி ஆரம்பித்து.. முடிந்தது ஆறுமுகசாமி ஆணைய விசாரணை

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் பலர் தங்கள் கருத்துகளை கூறியிருந்தனர். இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் நலக்குறைவினால் 75 நாட்கள் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பேசப்பட்டது. அது பற்றி விசாரிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் ஆறு ஆண்டுகாலம் விசாரித்து தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் படம் போல நடைபெற்ற ஆறுமுகசாமி ஆணைய விசாரணையின் கிளைமேக்ஸ் ஒன்றுமே இல்லாமல் முடிந்து விட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இரவு 10.20 மணிக்கு தான் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சுமார் 75 நாட்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா நலமோடு இருப்பதாக பலராலும் கூறப்பட்ட நிலையில் டிசம்பர் 5, 2016ஆம் நாள் ஜெயலலிதா மரணமடைந்தார்.

இந்த சம்பவம் அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. மருத்துவமனையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் இருந்தும் புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.

ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பு

ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பு


கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகம்சாமி ஆணையம் தனது விசாரணையை கடந்த 2017ஆம் முதல் தொடங்கியது. போயஸ் கார்டனில் இருந்த சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள்,பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறினர்.

சசிகலா பிராமணப்பத்திரம்

சசிகலா பிராமணப்பத்திரம்

சசிகலா சிறையில் இருந்ததால் அவரது தரப்பில் விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாத்ரூமில் தவறிவிழுந்த ஜெயலலிதா தம்மிடம் உதவி கேட்டதாக தெரிவித்துள்ள சசிகலா, ஜெயலலிதாவை கைத்தாங்கலாக படுக்கைக்கு கொண்டுவர தான் உதவியதாகவும், படுக்கையில் ஜெயலலிதா மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் ஜெயலலிதா வீட்டில் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் ஆம்புலன்ஸில் ஏற்றிய பின் சுயநினைவுக்கு திரும்பியதாக பிரமாணப்பத்திரத்தில் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

அப்பல்லோ வழக்கு

அப்பல்லோ வழக்கு

இதனிடையே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மருத்துவ நிபுணர்கள் இன்றி இயங்குவதாகவும், மருத்துவ நிபுணர்கள் குழுவில் இருந்தால்தான், விசாரணை முறையாக இருக்கும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

 உச்சநீதிமன்றம் தடை

உச்சநீதிமன்றம் தடை


இதனை எதிர்த்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது. இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசிடம் விளக்கம் கேட்டும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் நிலவியது.

மருத்துவர் குழு தேவை

மருத்துவர் குழு தேவை

அப்பல்லோ தரப்பில், ஆறுமுகசாமி ஆணையம் எங்களைத் தேவையில்லாமல் இழுத்தடிக்கிறது. ஆறுமுகசாமி ஆணையம் ஆதாரங்கள், ஆவணங்களை சேகரிக்கும் குழுவே தவிர நிபுணர் குழு அல்ல. அந்த ஆணையத்தில் ஒரு வல்லுநர்கள், நிபுணர்கள் கூட இடம்பெறவில்லை. ஒரு மருத்துவர் இல்லாத இடத்தில் எங்கள் தரப்பு மருத்துவர் என்ன தகவல்களைச் சொல்ல முடியும் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

உச்சநீதிமன்றம் கேள்வி

உச்சநீதிமன்றம் கேள்வி


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் என்ன மாதிரியான விசாரணை முறைகளை கடைப்பிடிக்கிறது எனக் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், பெரும்பாலான ஆணையங்களின் விசாரணை முடிவுகள் எதுவுமே தெரியாமல்தான் இருந்துள்ளது. முடிவுகள் தெரியாத நிலையில் எதற்கு இத்தனை ஆணையங்களை அமைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியது.

மருத்துவர்கள் குழு அமைப்பு

மருத்துவர்கள் குழு அமைப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ, மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு எய்ம்ஸ் சார்பில் அமைக்கப்பட்டது.

அப்பல்லோ மருத்துவர்கள்

அப்பல்லோ மருத்துவர்கள்

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்காலம் மீண்டும் நீடிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் மார்ச் 7ஆம் தேதி முதல் ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை மிண்டும் தொடங்கியது. அப்போலோ மருத்துவர்கள் 11 பேர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

குறுக்கு விசாரணை

குறுக்கு விசாரணை

அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் ஆகிய பிரச்னை இருந்தது என அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு

ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு

அப்பல்லோ மருத்துவர் மதன்குமார், ஜெயலலிதாவுக்கு 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை ஏற்பட்டது மாரடைப்பு தான் என்று பதிலளித்தார். மாரடைப்பு ஏற்பட்டபோது ஜெயலலிதாவுக்கு உயிரை காப்பதற்கான அனைத்து சிகிச்சை முறையும் தரப்பட்டது என்றும் அவர் கூறினார்.

 இளவரசி வாக்குமூலம்

இளவரசி வாக்குமூலம்

இளவரசியின் மகன் விவேக் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவின் வீட்டில் அவருடன் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி மார்ச் 21ஆம் தேதி ஆணையத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஓரிருமுறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாக கூறினார்.

ஆஜரானார் ஓ.பன்னீர் செல்வம்

ஆஜரானார் ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 21ஆம் தேதி ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது. இதனையடுத்து அவர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தார். 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது. அந்தசமயம் நான் எனது சொந்த ஊரில் இருந்தேன். நள்ளிரவு நேரத்தில் எனது உதவியாளர் மூலமாகவே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை தெரிந்துகொண்டேன். அடுத்தநாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த அப்போதைய தலைமைச் செயலாளரிடம் விவரங்களை முழுமையாக கேட்டறிந்தேன் என்று கூறினார்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை

பத்து மணி நேர விசாரணைக்குப் பிறகு தனது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று கூறி பல்டி அடித்தார். சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டைக் களைய வேண்டும் என்பதற்காகத் தான், ஆணையம் அமைக்கவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சரிதானா? என்று சசிகலாவின் ராஜா செந்தூர் பாண்டியன் கேட்டார் அதற்கு ஓபிஎஸ் சரிதான் என்று கூறினார். ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு ஏதும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா? என்று ராஜா செந்தூர் பாண்டியன் கேட்டார். அதற்கு ஓபிஎஸ், ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை, பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும் என்று கூறினார்.

புகழேந்தி மனு

புகழேந்தி மனு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி மனு அளித்திருந்தார். கடந்த 19 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி ஆஜராகியிருந்தார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 26 ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அவரிடம் கூறப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி ஆஜரானார். அவரிடம் ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

விசாரணை நிறைவு

விசாரணை நிறைவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 156 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

திரில்லர் சஸ்பென்ஸ்

திரில்லர் சஸ்பென்ஸ்


கடந்த ஆறு ஆண்டு காலம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. இதுவரை 3 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 534 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக தனது அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்வார் நீதியரசர் ஆறுமுகசாமி. சஸ்பென்ஸ் திரில்லர் படம் போட ஆரம்பித்த ஆணையத்தின் விசாரணை ஓ.பன்னீர் செல்வம் அளித்த வாக்குமூலத்திற்குப் பிறகு சப்பென்று ஆகிவிட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ள அதிமுகவினர் மட்டுமல்ல தமிழக மக்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+