ஜெயலலிதாவுக்கு சொந்தமான டாடா சஃபாரி கார் விற்பனைக்கு! விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய டாடா சஃபாரி கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரை வாங்க அதிமுக நிர்வாகிகள் போட்டி போட்டு வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா டாடா சஃபாரி காரை பயன்படுத்தி வந்தார். இவருக்கு கார்கள் என்றால் அலாதி பிரியம். அந்த வகையில் அவருக்கு பிடித்த டாடா சஃபாரி கார் 1999ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு வரை அந்த காரைதான் ஜெயலலிதா பயன்படுத்தி வந்தார்.

2007ஆம் ஆண்டு இந்த காரை அவருடைய நண்பர் பாரதி என்பவருக்கு கொடுத்துவிட்டார். அன்று முதல் அவர்தான் டாடா சஃபாரியை பயன்படுத்தி வந்தார். ஆனால் அவர் சில ஆண்டுகள் கழித்து வேறு ஒருவருக்கு அந்த காரை விற்றுவிட்டார்.
இப்படியே கைமாறி வந்த இந்த கார் தற்போது நிஜந்தன் ஏழுமலை என்பவரிடம் இருக்கிறது. அவர் தற்போது இந்த காரை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இந்த காரின் விலை ரூ 2.72 லட்சம் என சொல்லப்படுகிறது. இதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என அதிமுக பிரமுகர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.
இந்த சஃபாரி கார் டீசல் என்ஜின் கொண்டது. 1999 ஆம் ஆண்டு ஜெயலலிதா இந்த காரை வாங்கிய போது ரூ 9 லட்சம் முதல் 11 லட்சம் வரை இருந்திருக்கும். இது சென்னை தெற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் 1999ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கு இன்சூரன்ஸ் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. தற்போது காரை யார் வாங்குகிறார்களோ அவர்கள் இன்சூரன்ஸை ரினிவல் செய்து கொள்ள வேண்டும்.
இந்த 2.72 லட்சம் என்பது விலை குறைவு என்றே பலர் கருதுகிறார்கள். இந்த கார் முன்புதான் ஜெயலலிதாவை பார்த்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் குனிந்து வணங்கினர். டயர் இருக்கும் இடம் வரை கும்பிடு போட்டனர் என்ற விமர்சனங்களும் உண்டு. அது இந்த காரில் அவர் பயணிக்கும் போதுதான்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications