சாத்தான்குளம் சம்பவம்.. புட்டத்தில் தோல்களே இல்லை.. ஆசனவாயில் பெரிய காயம்.. உறவினர்கள் கதறல்
சென்னை: ஜெயராஜையும் பென்னிக்ஸையும் நாங்கள் ஜாமீனில் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த காயத்தை பார்க்கும் போது அவர்களை காப்பாற்றியிருக்க முடியாது என பிரேத பரிசோதனையை நேரில் பார்த்த உறவினர்கள் கூறினர்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்தவர்கள் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் ஊரடங்கு நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட தங்களது கடையை திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் இருவரும் கடந்த 19-ஆம் தேதி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டதாக போலீஸ் தரப்பும், இருவரையும் கொடுமைப்படுத்தியே கொன்றதாக ஜெயராஜ், பென்னிக்ஸ் உறவினர்களும் குற்றம்சாட்டினர்.

உறவினர்கள்
இந்த நிலையில் இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்களது பிரேத பரிசோதனை வீடியோவாக எடுக்கப்பட்டது. அப்போது கோவில்பட்டி மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையை மாஜிஸ்திரேட்டுடன் ஜெயராஜின் மைத்துனர் தாவீத், வினோத், ஓம்சேகர் ஆகியோர் பார்வையிட்டனர்.

ஆசனவாய் பகுதி
அவர்கள் கூறுகையில் முதலில் பென்னிக்ஸின் உடல் ஆய்வு செய்யப்பட்டது. அவரது காலில் இருந்த காயங்களை பார்த்த போது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தன. அது போல் பாதங்களிலும் காயங்கள் இருந்தன. நாங்கள் உடல் முழுவதும் பார்த்த போது அனைத்து இடங்களிலும் காயங்கள் இருந்தன. பிட்டத்தின் பகுதியில் தோல்களே இல்லை. அது போல் அவரது ஆசனவாய் பகுதியிலும் காயங்கள் இருந்தன.

ஜெயராஜின் உடல்
அது போல் இரு கைகளிலும் காயங்கள் இருந்தன. அவரது ஆசனவாய் பகுதியில் காயம் இருந்தது என நாங்கள் கூறிய போது அவர்கள் பென்னிக்ஸின் கால்களை விரித்து பார்த்தனர். அப்போது அந்த இடத்தில் இரு பெரிய காயங்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து ஜெயராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலிலும் பென்னிக்ஸை போலவே காயங்கள் இருந்தன.

மாஜிஸ்திரேட்
நாங்கள் அவர்களை ஜாமீனில் எடுத்திருந்தாலும் இந்த காயங்களை வைத்து அவர்களை காப்பாற்றியிருக்க முடிந்திருக்காது. அந்த அளவுக்கு கடுமையாக காயங்கள். போலீஸ் நிலையத்தில் அவர்களை பார்த்தது முதல் பிணவறையில் பார்த்து வரை நாங்கள் அனைத்தையும் மாஜிஸ்திரேட்டிடம் கூறிவிட்டோம் என்றனர்.
Recommended Video

எக்ஸ் ரே
அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் வைப்பதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவில்பட்டி பொது மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் வெங்கடேஷின் மருத்துவ அறிக்கை கூறுகையில் பின் தொடை பகுதியில் அவர்களுக்கு காயமம் இருந்தது. அது போல் பென்னிக்ஸின் வலது முட்டியில் முறிவு இருந்தது எக்ஸ் ரே மூலம் தெரிந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications