தவெகவுக்கு தாவிய அதிமுக புள்ளியின் மகன்.. நேரில் வரவேற்ற விஜய்! இது லிஸ்ட்லயே இல்லையே! அடுத்து?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் ஆரம்பித்தபோது பனையூர் கோட்டையில் புஸ்ஸி ஆனந்தை தாண்டி யாரும் நுழைய முடியாத சூழல் இருந்தது. இந்த நிலையில் செங்கோட்டையன் இணைந்த பிறகு தமிழக வெற்றி கழகத்தில் அந்த நிலை மாறி இருக்கிறது.
நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கும் நிலையில், இன்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் மகன் அமலன், ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்ட், பிரபல வழக்கறிஞர் சத்யகுமார் உள்ளிட்டோர் இணைந்து இருக்கின்றனர்.
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் கடந்த ஆண்டு கட்சியை ஆரம்பித்தார். இரண்டு மாநில மாநாடுகளையும் நடத்தி முடித்திருக்கிறார். அதே நேரத்தில் விஜய் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மக்களை சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டை விட விஜயை சந்திக்க முடியவில்லை என்பதுதான் அது.

தமிழக வெற்றிக் கழகம்
கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த புஸ்ஸி ஆனந்த் தன்னைத் தவிர விஜய்யை யாரும் நெருங்கி விடக்கூடாது என மிக கவனமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து இணைந்த நிலையில் அந்த கட்சியைத் தாண்டி வெளியில் இருந்து யாரும் விஜயை சந்திக்க கூட முடியவில்லை. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக அரசியல் பாதையில் திடீர் திருப்பமாக அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன் இணைந்தது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
விஜய் அரசியல்
உண்மையைச் சொல்லப்போனால் ஒரு பொதுக்கூட்டத்தை கூட ஒருங்கிணைக்க முடியாமல் தமிழக வெற்றி கழகம் திணறி வந்தது. அதனை சரி செய்யும் வகையில் செங்கோட்டையின் இணைந்தது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். அதை நிரூபிப்பது போல ஈரோட்டில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை மாநாடு போல நடத்திக் காட்டினார் செங்கோட்டையன். இது தமிழக வெற்றிக்கழகத்தினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
செங்கோட்டையன் இணைப்பு
மேலும் பல்வேறு கட்சிகளுடன் பல ஆண்டுகள் தொடர்பில் இருப்பதால், மேலும் பல அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அது நடந்தும் இருக்கிறது. இன்று பிரபல ஊடகவியலாளரான பெலிக்ஸ் ஜெரால்ட், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தொடர்ந்து திமுக எதிர்ப்பை பிரதானமாக வைத்து இருந்த அவர் நாம் தமிழருக்கு ஆதரவாக பல நேரங்களில் பேசி இருக்கிறார்.
ஜேசிடி பிரபாகர் மகன்
இந்த நிலையில் திடீரென கடந்த சில தினங்களாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த பெலிக்ஸ் இன்று விஜய் முன்னிலையில் இணைந்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் பிரபல வழக்கறிஞரான சத்யகுமார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து இருக்கிறார். அவரும் தவெக ஆதரவாளராகவே பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றையும் விட கவனிக்கத்தக்க விதமாக அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக அமைப்புச் செயலாளருமான ஜேசிடி பிரபாகரனின் மகன் அமலன் விஜய் கட்சியில் இணைந்து இருப்பதுதான் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி
எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான ஜேசிடி பிரபாகர் ஜெயலலிதாவுடன் பணியாற்றி இருக்கிறார். அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி அணியிலும் பின்னர் ஓபிஎஸ் அணியிலும் பயணித்த அவர் கட்சியில் பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க முடியவில்லை என அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில், தான் அவரது மகன் திடீரென விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்திருப்பது பேசுபொருளாக மாறி இருக்கிறது. மேலும் அதிமுகவிலிருந்து மேலும் பல முக்கிய புள்ளிகளும் தமிழக வெற்றி கழகத்திற்கு வருவார்கள் என அவர் சொல்லியிருப்பது பரபரப்பை மேலும் அதிகமாக்கி உள்ளது.
-
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து.. 2வது தேசிய கீதத்துடன் தொடங்கியது தமிழக சட்டமன்ற கூட்டம்! -
முதல்வர் விஜய் பிறந்த நாள்.. வண்டலூர் பூங்காவில் ஜூன் 21, 22-ல் அனுமதி இலவசம்.. அமைச்சர் விளக்கம் -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி? முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு வைகோ கொடுத்த பதில் -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
சேரனின் சம்மட்டி அடி.. ECR-ல் விஜய் அதை பார்த்தாரா? தவெகவில் சீட் பிடிக்க லாரன்ஸின் ஹம்பக் விளம்பரம் -
எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டு இல்லை... முதல்வர் விஜய்யை பாராட்டிய வைகோ












Click it and Unblock the Notifications