Cellphone: செல்போனை பார்த்து படித்த அமைச்சர் ஷாஜகான்! டென்ஷனான ஜேசிடி பிரபாகர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைக்கு அமைச்சர் ஷாஜஹான் செல்போன் கொண்டு வந்ததை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் மேகதாது அணைக்கு எதிராக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசினர்.

jcd prabhakar tamil nadu assembly

இதைத் தொடர்ந்து அவை மதியத்திற்கு மேல் நீடித்தது. இந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு, இன்று மீண்டும் அவை கூடியது. அப்போது முதல்வர் விஜய், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என தனித்தீர்மானத்தை விஜய் கொண்டு வந்தார்.

அப்போது சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், மொழி எப்போதும் தொடர்புக்கான ஒன்றே. அதை யாரும் மறுக்க முடியாது. உலகில் உள்ள எல்லா மொழிக்கும் இது பொருந்தும், அதையும் மறுக்க முடியாது. ஆனால் தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. பேசினால் வரும் ஓசை மட்டுமல்ல. தமிழ் நமது உயிர். நமது உணர்வு.

நம்மை பெற்ற தாயை அம்மா என்று சொல்லும்போது பாசம், சொந்தமும் நம்மை அறியாமலே நமக்குள் உயிராக, உணர்வாக தோன்றுவதுபோல, தமிழும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. தாய் எப்படி மிகப்பெரிய புனிதமோ அதுபோல தான் தாய் மொழியும்.

நம் தாய் நமக்கு மிகப் பெரிய புனிதம் என்றால் நம் எல்லாருக்குமான தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும். தாயை போற்றுகிற வாழ்த்துகிற தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விட முடியும், விடவும் மாட்டோம். நமது தமிழ்த்தாய் வாழ்த்து 1891-ல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் நம் தமிழ் மொழியை தமிழ்த்தாய் என்று உயர்வாக பாடினார்.

தமிழ் என்றால் விருந்தொம்பல். சுருக்கமாக சொன்னால், தமிழ் என்றால் கெத்து. தமிழ் என்றால் பவர். அந்த தமிழோட புகழை கூறும் தமிழ்த்தாய் வாழ்த்தில் அனைத்துலகும் இன்பமுற என்று சொல்லி உலகத்தையே நம் தமிழ் உயர்த்தி பிடிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து எந்த மொழி, மதம், இனத்தையும், எந்த தனி மனிதனையும் தாழ்த்தி பேசவில்லை. கொஞ்சமும் காயப்படுத்தவில்லை. இவ்வாறு விஜய் தெரிவித்தார்.

அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்டோர் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் சட்டசபையில் அமைச்சர் ஷாஜஹான், செல்போன் பார்த்து படித்ததாக தெரிகிறது. இதை பார்த்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், கண்டித்தார். அப்போது அவர் "சட்டசபைக்குள் யாரும் செல்போன் கொண்டு வர அனுமதி இல்லை. அதை பார்த்து படிப்பதற்கும் அனுமதி இல்லை" என அறிவுறுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+