எம்எல்ஏவாக தொடர விரும்பும் இசக்கி சுப்பையா! ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் முடிவு என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை திரும்பப் பெறுவதாக இசக்கி சுப்பையா கடிதம் கொடுத்திருப்பது குறித்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் வரை அம்பாசமுத்திரம் எம்எல்ஏவாக செயல்பட இசக்கி சுப்பையா கொடுத்துள்ள கடிதம் ஆய்வில் இருக்கிறது.

admk court ambasamudhram

அதுகுறித்து சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும் அந்த கடிதம் குறித்த முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் திடீர் திருப்பமாக அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏவாக மீண்டும் செயல்பட அனுமதி கோரி இசக்கி சுப்பையா, சபாநாயகரிடம் மனு அளித்துள்ளதால் பரபரப்பு எழுந்தது. மேலும் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக இசக்கி சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனது தொகுதி மக்கள் எம்எல்ஏ இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என ஹைகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது. ஹைகோர்ட்டே மறுத்துவிட்ட நிலையில் சபாநாயகர் எந்த மாதிரியான முடிவுகளை எடுப்பார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக பெரும்பான்மையை பெறாத நிலையிலும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது.

பெரும்பான்மை இல்லாததால் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தவெக அரசு நம்பிக்கை கோரிய தீர்மானத்தின் மீது அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் அக்கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர்.

இந்த நிலையில் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த போது அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கிரி, ராஜகோபால் ஆகியோர் இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி திருப்தியைந்த பின்னர் அதை ஏற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த விசாரணை என்பது பெறும் சம்பிரதாயம் அல்ல, அரசியல் சாசன கடமை. அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என குறிப்பிட்டனர்.

சபாநாயகர் தரப்பில் ஆஜரான சி.எஸ்.வைத்தியநாதன், "ராஜினாமா ஏற்றுக் கொண்டதால், தகுதி நீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகி விடாது. ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானது தான். ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும் படி அவரை நிர்பந்திக்க முடியாது. எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு எந்த மாதிரி வரும் என்பதை பொறுத்தே இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிடும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+