கிட்டே நெருங்கி.. கல்யாண பெண்ணின் கன்னத்தை கிள்ளிய போட்டோகிராபர்.. அப்டியே மிரண்டு போன மாப்பிள்ளை

கல்யாண பெண்ணின் கன்னத்தில் கை வைத்த போட்டோகிராபர் ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேடையில் மாப்பிள்ளையை ஓரங்கட்டிவிட்டு, கல்யாண பெண்ணின் கன்னத்தில் கை வைத்தாரே போட்டோகிராபர், அது ஏன் தெரியுமா? அது சம்பந்தமாகதான் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    மணமகளை மட்டும் போக்கஸ்... கேமராமேனை அடித்த மணமகன்... சிரிப்பு வீடியோ!

    இப்போதெல்லாம் கல்யாணத்தை விட, அந்த கல்யாணத்துக்கு முன்பு எடுக்கப்படும் போட்டோ ஷூட்கள்தான் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன..

    அதேபோல, கேமராமேன்கள், போட்டோகிராபர்களும், தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், இதுபோன்ற திருமண விழாக்களில் "அவுட்டிங்" போட்டோக்களையும் அதிக அளவில் எடுத்து வருகின்றனர்.

     இளைஞர்கள்

    இளைஞர்கள்

    வழக்கமான கல்யாணங்களில் போட்டோக்களை எடுத்து வந்தநிலையில், இளைஞர்கள் இப்போது இது மாதிரியான புதுமைகளையே விரும்ப தொடங்கி உள்ளனர். அதற்காக ஒரு எல்லையின்றி மணமக்கள் போஸ் கொடுப்பதுதான் வேதனையாகவே மாறி வருகிறது... இந்த ஜோடி, சகதியில் புரளுவதும், ஒரே ஒரு டவலை மட்டும் உடம்பில் சுற்றி கொண்டு தோட்டத்தில் ஓடுவதும், என எல்லை மீறுகின்றன.

    வைரல்

    வைரல்

    இப்போதும் 2 நாளைக்கு முன்பு ஒரு கல்யாண வீடியோ வைரலானது.. மணமக்கள் மேடையில் அலங்காரத்துடன் நின்று கொண்டிருக்கிறார்கள்.. அப்போது போட்டோகிராபர், அங்கிருந்த மாப்பிள்ளையை ஒரு ஓரமாக தள்ளிவிட்டு, கல்யாண பெண்ணையே குறி வைத்து போட்டோ எடுத்து கொண்டிருந்தார்.

     கல்யாண பெண்

    கல்யாண பெண்

    ஓரத்தில் ஒதுங்கி நின்ற மாப்பிள்ளை பரிதாபமாக நிற்பதும், மணப்பெண் சிரித்து கொண்டே போஸ் கொடுப்பதும், அந்த போட்டோகிராபர் கல்யாண பெண்ணையே சுற்றி சுற்றி வந்ததும் என மண்டபமே அதிர்ந்துவிட்டது. ஒருகட்டத்தில் போட்டோகிராபர் திடீரென, அந்த கல்யாண பெண்ணின் கன்னத்தில் கையை வைத்தார்.. பிறகு அதுபோலவே அந்த பெண்ணையும் போட்டோவுக்கு போஸ் தர சொன்னார்..

    டென்ஷன்

    டென்ஷன்

    இதை பார்த்ததும் மாப்பிள்ளை உச்சக்கட்ட டென்ஷனுக்கு போய்விட்டார்.. அதே மேடையில் வைத்தே போட்டோகிராபரின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டார்.. உடனடியாக அந்த மண்டபத்தை விட்டு வெளியே போக சொன்னார்.. ஆனால், அந்த கல்யாண பெண்ணோ, இதையெல்லாம் பார்த்து தரையில் விழுந்து விழுந்து சிரித்தார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி படு வைரலானது. ஆனால், இந்த வீடியோ குறித்த உண்மை செய்தி வெளியாகி உள்ளது.

    ஷூட்டிங்

    ஷூட்டிங்

    அந்த வீடியோவில் இருக்கும் மணமகள் ஒரு நடிகையாம்.. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்.. பெயர் அனிகிரிதி சவ்ஹான்.. "டார்லிங் பியார் ஜும்தா நஹி" என்ற படத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது.. அதில் ஒரு சீன்தான் இந்த மண்டபத்தில் எடுக்கப்பட்டுள்ளது.. நிஜமாகவே இது கல்யாணம் இல்லை.. அந்த ஷூட்டிங்கில் நடந்த காட்சி இது என்று அந்த நடிகையே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.. அத்துடன் படத்தின் வேறு சில காட்சிகளையும் ஷேர் செய்துள்ளார்.. கறாங்க...!

    எப்படியெல்லாம் ஒரு படத்தை ஓட வைக்கிறாங்கய்ய்ய்யா!??

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+