JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced 2026) தேர்வு முடிவுகளை ஐஐடி ரூர்க்கி (IIT Roorkee) நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இதனுடன், தேர்வுக்கான Answer Key அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய முடிவுகளை jeeadv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்துப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

jee delhi

தேர்வு முடிவுகளைப் பார்ப்பது எப்படி?

மாணவர்கள் இணையதளத்திற்குச் சென்று, தங்களது பதிவு எண் (Roll Number), பிறந்த தேதி மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட்டு தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

மதிப்பெண் அட்டையில் (Scorecard) பின்வரும் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்:

மாணவரின் பெயர் மற்றும் தகுதி நிலை
அகில இந்தியத் தரம் (AIR)
பாடம் வாரியான மற்றும் மொத்த மதிப்பெண்கள்
பிரிவு வாரியான தரம் (Category Rank) மற்றும் கட்ஆஃப் (Cut-off) மதிப்பெண்கள்

முதலிடம் பிடித்த சாதனையாளர்கள்

தேர்வு முடிவுகளுடன் சேர்த்து, அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறப்பான மாணவர்களின் பட்டியலையும் ஐஐடி ரூர்க்கி வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வில் 360 மதிப்பெண்களுக்கு 330 பெற்று பீகாரை சேர்ந்த சுபம்குமார் என்பவர் முதலிடத்தையும், 329 பெற்று குருகிராமை சேர்ந்த கபீர் சில்லார் என்பவர் இரண்டாவது இடத்தையும், 319 பெற்று ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த ஜதின் சஹார் என்பவர் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். அது போல் 280 மதிப்பெண்கள் பெற்று அரோஹி தேஷ்பாண்டே என்ற பெண் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சுபம்குமாரின் தந்தை ஹார்டுவேர் பிசினஸ் செய்து வருகிறார். தாய் இல்லத்தரசி, சுபம் குமாரின் மூத்த சகோதரி ஐஐடி பாட்னாவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

இரண்டாம் இடம் பிடித்த கபீரின் தந்தை ஐஐடியில் படித்தவர். ஒரு நாளைக்கு 15 மணி நேரம் படித்தால்தான் ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்பதெல்லாம் தவறான தகவல். நான் அப்படியெல்லாம் படிக்கவில்லை என்கிறார் கபீர்.

மூன்றாம் இடம் பிடித்த ஜதீன், ஒரு கிராமத்தில் படித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இவர் காலை முதல் மதியம் வரை படிப்பாராம், பின்னர் தான் படித்தவற்றை மாலையில் ரிவைஸ் செய்வாராம்.

தேர்வு குறித்த முக்கியத் தகவல்கள்

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (IIT) இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான முக்கிய நுழைவுத் தேர்வாக இது அமைகிறது.

தேர்வு நடந்த தேதி: கடந்த மே 17, 2026 அன்று இந்தத் தேர்வு நடைபெற்றது.

தகுதி பெற்றவர்கள்: ஜேஇஇ மெயின் (JEE Main) தேர்வில் முதல் 2.5 லட்சம் இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுதத் தகுதி பெற்றனர்.

விண்ணப்பித்தவர்கள்: மொத்தம் 1,87,389 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.

தேர்வு எழுதியவர்கள்: 1,79,694 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.

தேர்ச்சி பெற்றவர்கள்: மொத்தம் 56,880 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 10,107 பெண் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.

தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு PDF வடிவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தரவிறக்கம் செய்ய மாணவர்கள் எந்தவொரு உள்நுழைவு (Login) விவரங்களையும் உள்ளிடத் தேவையில்லை. நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த முடிவுகள் மற்றும் விடைக்குறிப்புகள் வெளியானதன் மூலம், இந்த ஆண்டிற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு செயல்முறைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+