JEE: ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி-யில் என்ஜினியரிங் படிக்கணுமா? ஜேஇஇ மெயின் தேர்வு எழுதுங்க! நவ.27 கடைசி நாள்
சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜேஇஇ மெயின் தேர்வுக்கு வரும் நவம்பர் 27ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக் சேர்க்கைக்கான ஜேஇஇ மெயின் தேர்வு தாள் 1, பிஆர்க், பி பிளானிங் சேர்க்கைக்கான ஜேஇஇ மெயின் தேர்வு தாள் 2ம் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகின்றன.

இந்த நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல் ஆகிய இருமுறை நடத்தப்படும். அந்த வகையில் 2026- 2027-ஆம் கல்வியாண்டில் மேற்கண்ட படிப்புகளின் சேர்க்கைக்கான முதல் ஜேஇஇ மெயின் தேர்வு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் www.nta.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி நவ.27ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் தேர்வு மையத்தின் விவரங்கள் ஜனவரி முதல் வாரம் வெளியிடப்படும். இந்தத் தேர்வின் முடிவுகளை பிப்.12 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறும் 2ஆவது ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் சேர ஜேஇஇ மெயின் தேர்வில் குறிப்பிட்ட Percentile பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில் ஐஐடியில் சேர வேண்டுமானால் ஜேஇஇ advanced தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜேஇஇ மெயின் தேர்வில் குறிப்பிட்ட தரவரிசைக்குள் இருக்கும் மாணவர்கள் அட்வான்ஸுடு தேர்வு எழுதலாம் என குறிப்பிடத்தக்கது.
ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவது அத்தனை எளிதான காரியம் அல்ல. அதற்கு நிறைய பயிற்சிகள் தேவை. அதிக நேரம் படிக்க வேண்டியுள்ளது. கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் ஜேஇஇ தேர்வில் சாதிக்கலாம். வாழ்த்துகள் மாணவர்களே!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications