வடிவுக்கரசி வீட்டு கதவை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள்.. நகைகள் அபேஸ்
சென்னை: மூத்த நடிகை வடிவுக்கரசியின் வீட்டு பூட்டை உடைத்து, தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் மூத்த நடிகை வடிவுக்கரசி. இவர், தற்போது சின்னத்திரை நெடுந்தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வடிவுக்கரசியின் வீடு, சென்னை பாண்டி பஜார் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் உள்ளது. இங்கு உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்தான் வடிவுக்கரசி வசித்து வருகிறார்.
இதனிடையே தி.நகரில் மற்றொரு பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு கடந்த 10ஆம் தேதி வடிவுக்கரசி சென்றிருந்தார். வடிவுக்கரசியின் வீடு தொடர்ந்து பூட்டியிருப்பதை நோட்டமிட்ட திருடர்கள் அவரது வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
நேற்று இரவு குடியிருப்பின் காவலாளி இதை கவனித்து வடிவுக்கரசிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வடிவுக்கரசி கொடுத்த புகாரின் பேரில், பாண்டிபஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications