சர்ருனு ஏறும் தங்கம் விலை.. இன்று வரலாறு காணாத உயர்வு.. வெள்ளியும் எக்குத்தப்பா எகிறுதே!
சென்னை: வரலாற்றிலேயே இல்லாத அளவு ஆபரண தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் இன்று சவரனுக்கு ரூபாய் 480 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ரூபாய் 7 ஆயிரத்தை கடந்து எகிறிக் கொண்டிருக்கிறது.
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதவாக்கில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்தது. அமெரிக்க பெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, விலை சரிவு நின்று, அதன்பிறகு வேகமாக தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.
சென்னையில் இன்று (செப்டம்பர் 25) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 60 உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 7,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 8 கிராம் (ஒரு சவரன்) ஆபரணத் தங்கம் ரூபாய் 480 உயர்ந்து, ரூபாய் 56,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நேற்று முதல் முறையாக கிராம் ரூபாய் 7 ஆயிரத்தை எட்டிய நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. தங்கத்தின் இந்த தொடர் விலையேற்றம், தங்க நகை வாங்க எண்ணிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, மீண்டும் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 100-ஐ கடந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1,01,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications