ஆவடியில் ஷாக்! வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைத்து வைத்த ஓனருக்கு அதிர்ச்சி! சிசிடிவியில் பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவடியில் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஒளித்து வைத்துவிட்டு சென்ற நபர் வீடு திரும்பியதும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இது போன்று சம்பவங்கள் எத்தனை தவறு என்பதை தெரிந்திருந்தாலும் "என்ன ஆகிட போகுது" என்ற அலட்சியங்களால் நாம் இழப்பது நிறைய விஷயங்களை என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள்.

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை. அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் உள்ள உறவினரின் வீட்டுக்குச் செல்ல செயலி மூலம் ஆட்டோவை புக் செய்திருந்தார்.

crime avadi police

அப்போது செந்தாமரையை அழைத்து செல்ல பெண் ஆட்டோ ஓட்டுநர் வந்திருந்தார். அவர் ஆட்டோவில் காத்திருந்த போது, செந்தாமரைக்கு போன் செய்து தான் வந்துவிட்டதாக கூறினார். உடனே செந்தாமரை வெளியே வந்து பார்த்துவிட்டு, இதோ தான் வந்துவிடுவதாக தெரிவித்துவிட்டு வீட்டுக்குள் சென்றார்.

பிறகு உள்ளே இருந்து வெளியே வந்த செந்தாமரை , வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவு அருகே ஒளித்து வைத்துள்ளார். பிறகு செந்தாமரை தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு அங்கேயே தங்கிவிட்டார். மறுநாள் காலை வீட திரும்பிய போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு வீட்டிலிருந்த ஒரு சவரன் நகையும், ரூ 50 ஆயிரம் ரொக்கமும் திருடு போனது தெரியவந்தது.

இதையடுத்து ஆவடி காவல் துறையில் புகார் செய்ததை அடுத்து போலீஸார் அந்த வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது செந்தாமரையை அழைத்துச் சென்ற பெண் ஆட்டோ ஓட்டுநர், அவரை இறக்கிவிட்டுவிட்டு அதே வீட்டிற்கு திரும்பி வந்த காட்சிகள் பதிவாகியிருந்தன.

மேலும் அந்த ஆட்டோ ஓட்டுநர் , செந்தாமரை மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை ஆவடி போலீஸார் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+