"ஜி PAY”.. மோடி படத்துடன் போஸ்டர்.. ஸ்கேன் செய்தால் வரும் குரல்.. திமுகவின் ஹை-டெக் பிரச்சாரம்!
சென்னை: பிரதமர் மோடி புகைப்படத்துடன் "ஜி PAY.. Scan பண்ணுங்க.. Scam பாருங்க" என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களத்தில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி கொடிகளும், வாக்களிப்பீர் போஸ்டர்களும் களத்தை பரபரப்பாக்கியுள்ளன.

அரசியல் கட்சிகளின் விளம்பர டீம்கள் லோக்சபா தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. தங்களுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் வாக்குறுதிகளை அச்சிட்டு துண்டுப் பிரசுரங்களாக வாக்காளர்களிடம் விநியோகிப்பது, விளம்பர பிரச்சார பாடல்கள் மூலம் கவனம் ஈர்ப்பது இவை எல்லாம் ஒரு புறம் இருக்க, எதிர் அணியை குறிவைத்து ஹைடெக் தேர்தல் பிரச்சாரமும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், இந்த போஸ்டர்களை ஒட்டி இருப்பது பாஜகவினர் அல்ல, திமுகவினர். பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் ஹைடெக் பிரச்சார வியூகத்தை முன்னெடுத்துள்ளது திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி.
பிரதமர் மோடி புகைப்படத்துடன் "ஜி PAY.. Scan பண்ணுங்க.. Scam பாருங்க" என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த போஸ்டர்களில் மோடி உருவத்துடன் இருக்கும் QR கோடை ஸ்கேன் செய்தால், பாஜகவின் ஊழல்கள் என ஒரு வாய்ஸ் ஓவர் உடன் கூடிய வீடியோ ஓடத் தொடங்குகிறது.
சுமார் 1 நிமிடம் 30 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், "ஊழல் நிறைந்த இந்த மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நம் மானத்தையும் கோவணத்தையும் இழக்க நேரிடும். கறுப்புப் பணத்தை மீட்டு மக்களின் வங்கிக் கணக்கில் ரூபாய் 15 லட்சம் வரவு வைக்கப்படும் என சொன்னார்கள். ஆனால் அது என்னாச்சு? இவர்கள் செய்யும் வசூல் தான் அதிகமாகி உள்ளது" என தொடர்ந்து அந்த குரல் பேசுகிறது.
மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாகவும், சுங்கச்சாவடி முறைகேடு, பாரத் மாலா, துவாராகா விரைவு பாலம் கட்டுமானம் என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு, ஊழலில் ஊறித் திளைக்கும் பாஜக அரசை புறம் தள்ளி இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்போம் என வாக்கு சேகரித்து நிறைவடைகிறது அந்த ஆடியோ வீடியோ.
தமிழ்நாடு முழுவதும் வேலூர், திருப்பூர் என பல்வேறு இடங்களில் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பலரும், இந்த போஸ்டர்களை ஸ்கேன் செய்து, பிரச்சார விளம்பரத்தை கேட்டு வருகின்றனர்.
People of TN has come up with G Pay, don’t get confused it is not Google pay 😂😂
— Vijay Thottathil (@vijaythottathil) April 11, 2024
It is Modi G Pay 👌🏼👌🏼
Pay to Modi ji and do the scams & loot!
Spread the word! pic.twitter.com/6ZBzbxqC3a
கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக 'Pay CM' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது காங்கிரஸ். இந்நிலையில் அதே பாணியில் தற்போது பாஜகவை டார்கெட் செய்து களமிறங்கியுள்ளது திமுக கூட்டணி.
பிரதமர் மோடி வேலூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுகவையும், காங்கிரஸ் கட்சியையும் ஊழல் கட்சிகள் என கடுமையாக விமர்சித்துப் பேசிய நிலையில், மோடி படத்துடன் பாஜக ஊழல்கள் எனக் குறிப்பிட்டு நூதன பிரச்சாரத்தை இந்தியா கூட்டணி முன்னெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications