வாய்ஸ் கால்ஸ் + நெட்பிளிக்ஸ்.. அதுவும் ரூ.1099க்கு! எத்தனை நாள் தெரியுமா? ஜியோ அறிவித்த சூப்பர் ஆஃபர்
சென்னை: சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எனவே டெலிகாம் நிறுவனங்கள் அவ்வப்போது சில அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஜியோ (JIO) நிறுவனம் அறிவித்த ஆஃபர் ஒன்று மற்ற சிம் கார்டு யூசர்களையும் ஈர்த்திருக்கிறது.
ஜியோ நிறுவனத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. இன்று ஐடியா டெலிகாம் சர்வீசும், வோடபோஃன் டெலிகாம் சர்வீசும் அதலபாதாளத்திற்கு சென்றதற்கு ஜியோதான் காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் பெருவாரியான மக்கள் மத்தியில் இன்டெர்நெட் பயன்பாட்டை கொண்டு சேர்த்ததிலும் ஜியோவுக்கு பங்கு இருக்கிறது. ஏனெனில் ஜியோ வெளியிட்ட ஆஃபர் அந்த மாதிரி. ஜியோ வருவதற்கு முன்னர் மொபைலில் பேசுவதற்கு தனியாகவும், நெட் பேக் தனியாகவும் ரீசார்ஜ் செய்துக்கொண்டிருந்தோம்.

ஆனால் ஜியோ வந்ததற்கு பின்னர் அனைத்திற்கும் ஒரே ரீசார்ஜ் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற டெலிகாம் நிறுவனங்களும் ஜியோ போலவே அனைத்திற்கும் ஒரே ரீசார்ஜ் எனும் திட்டத்தை அமலாக்கியது. ஆனால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு ஒரு சில ஆண்டுகள் கழிந்த பின்னர் மக்களுக்கும் போர் அடித்துவிட்டது. எனவே ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தாவினர். இதனை தடுக்க அவ்வப்போது ஜியோ சில அதிரடி ஆஃபர்களை வழங்கி வந்தது.
இந்நிலையில் தற்போது மற்றொரு சிறப்பான ஆஃபரை அறிவித்திருக்கிறது. அதாவது, ரூ.1,099க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு தலா 2 GB டேட்டா என 84 நாட்களுக்கு போன் அழைப்புகள், எஸ்எம்எஸ் போன்ற சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் சிறப்பு என்னவெனில், இத்துடன் 84 நாட்களுக்கு Netflix செயலியையும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அதை மொபைலில் மட்டுதான் பயன்படுத்த முடியும். இது தவிர JioTV, JioCinema மற்றும் JioCloud சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த ஆஃபர் தற்போது ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. பலரும் இந்த ஆஃபருக்கு தாவியுள்ளனர். அதேபோல மற்றொரு ஆஃபரையும் ஜியோ அறிவித்துள்ளது. அதன்படி ரூ.1,499க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3 GB டேட்டா என 84 நாட்களுக்கு போன் அழைப்புகள், எஸ்எம்எஸ் போன்ற சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இதிலும், Netflix(Basic) செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம். இது தவிர JioTV, JioCinema மற்றும் JioCloud சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை அனைத்தும் ஜியோ பிரீபெய்டு பயனாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஜியோ கூறியுள்ளது.
ஜியோவின் இந்த அறிவிப்பால் மற்ற நெட்வொர்க் சிம் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் மெல்ல ஜியோ பக்கம் தாவி வருகின்றனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications