ஜியோ இறக்கிய “டாப் டக்கர்” ரீசார்ஜ் பிளான்கள்.. ரூ.300க்கு குறைவாக 5 திட்டங்கள் இருக்கு! இதோ லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொபைல் சேவை கட்டணங்கள் அண்மையில் உயர்த்தப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ரூபாய் 300க்குள் டேட்டா + வாய்ஸ் கால் உடன் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது ஜியோ. 300 ரூபாய்க்குள் ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்.

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, கடந்த மாதம் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. இதனை தொடர்ந்து பிற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின.

Jio recharge mobile

ரீசார்ஜ் கட்டண உயர்வு, வாடிக்கையாளர்களுக்கு பெரும் வேதனையைக் கொடுத்துள்ளது. ரீசார்ஜ் செய்யும்போதெல்லாம், முன்பு தாங்கள் ரீசார்ஜ் செய்ததை விட அதிக தொகை செலவாவதால் புலம்பி வருகின்றனர். ஜியோ வாடிக்கையாளர்கள் பலர், பி.எஸ்.என்.எல் நோக்கியும் படையெடுத்து வருகின்றனர். பி.எஸ்.என்.எல் குறைந்த விலையில் அதிக டேட்டா பலன்களோடு ரீசார்ஜ் திட்டங்களை வைத்திருப்பதால் பெரும்பாலானோர் BSNL சேவைக்கு மாறி வருகின்றனர்.

இந்நிலையில், பழைய விலையிலேயே சில திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது ஜியோ. ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் இணையம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்ளுக்கு ஏற்ற விலையில் பல நன்மைகளை வழங்குவதாக இருக்கின்றன. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக குறைந்த விலையில் அதாவது ரூபாய் 300க்குள் ஜியோ வழங்கும் சில சூப்பரான "டேட்டா + அன்லிமிட்டட் வாய்ஸ் கால்" பிளான்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

ரூ. 198 ரீசார்ஜ் பிளான்: ஜியோவின் 198 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் இலவசம். தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) மற்றும் ஜியோ டிவி (JioTV) உள்ளிட்ட பல கூடுதல் பலன்களும் கிடைக்கும். மேலும், 5ஜி டேட்டா அன்லிமிட்டெட்.

ரூ.199 ரீசார்ஜ் பிளான்: இந்த பிளானில் 18 நாள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி, சினிமா, கிளவுட் போன்றவையும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ரூ.209 பிளான்: இதில் 22 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1 ஜி.பி தினசரி டேட்டா கிடைக்கும். அத்துடன் அன்லிமிட்டட் வாய்ஸ் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோவின் பொழுதுபோக்கு சேவைகளையும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

ரூ. 239 ரீசார்ஜ் பிளான்: தினசரி 1.5 ஜிபி டேட்டாவை 22 நாட்களுக்கு வழங்குகிறது ஜியோவின் இந்த ரூபாய் 239 பிளான். மேலும், இந்த திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும் ஜியோவின் பொழுதுபோக்கு சேவைகளும் இந்தத் திட்டத்தின் வாயிலாக கிடைக்கும்.

ரூ. 249 பிளான்: 28 நாள் வேலிடிட்டியுடன் 1 ஜி.பி தினசரி டேட்டா வழங்கும் இந்த திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும் ஜியோவின் பொழுதுபோக்கு சேவைகளும் இந்தத் திட்டத்தின் வாயிலாக கிடைக்கும்.

ரூ. 299 பிளான்: ஜியோவின் ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ டிவி உள்ளிட்ட பல நன்மைகளும் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+