ஒரு நாளுக்கு வெறும் ரூ.10.. தினசரி 2 GB டேட்டா, இலவச கால்ஸ்.. அள்ளி வீசும் ஜியோ! கூடவே தீபாவளி ஆஃபர்
சென்னை: ரீசார்ஜ் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்து நிற்கும் நிலையில், விலை மலிவான பிளான்களை வாடிக்கையாளர்கள் தேடி வருகின்றனர். அவர்களுக்காகவே, ஒரு நாளைக்கு வெறும் 10 ரூபாயில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் 5ஜி டேட்டா, இலவச வாய்ஸ் கால் உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது ஜியோ. இந்த பிளான்களை பற்றி பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் 1 தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்து வருகிறது ரிலையன்ஸ் ஜியோ. நாடு முழுவதும் சுமார் 49 கோடி பேர் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகின்றனர். ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதம், ரீசார்ஜ் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தின.

ஜீயோவின் சூப்பர் பிளான்: ரீசார்ஜ் கட்டண உயர்வுக்குப் பிறகு, மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிட்டு மலிவான ஆப்ஷன்களை யூசர்கள் தேடி வருகின்றனர். வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டத்தை குறைந்த விலையில் அளித்து வருகிறது. அதன்படி, 98 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானை குறைந்த விலையில், அதாவது ஒரு நாளைக்கு ரூ. 10 என்ற அளவில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறது ஜியோ.
98 நாட்களுக்கு கவலையே இல்லை: இந்த பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் 98 நாட்களுக்கு ரீசார்ஜ் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கலாம். உங்கள் ஜியோ எண்ணை 999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 98 நாட்களுக்கு எந்த ஒரு நெட்வொர்க்கிற்கும் அன்லிமிட்டெட் இலவச அழைப்புகளைச் செய்யலாம். மற்ற திட்டங்களைப் போலவே, இதிலும் தினசரி 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம்.
தினசரி 2 ஜிபி டேட்டா: இந்த ரீசார்ஜ் பிளானில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2 GB டேட்டா வழங்கப்படும். அதாவது 98 நாட்களில் மொத்தம் 196 GB டேட்டாவைப் பயன்படுத்தலாம். எனவே, அதிக டேட்டா தேவைப்படும் யூசர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டம் ஒரு வரப்பிரசாதம்.
அன்லிமிட்டட் 5ஜி: மேலும், அன்லிமிடெட் 5 ஜி டேட்டா வசதியும், இந்தத் திட்டத்தில் கிடைக்கும். இந்த பிளானுடன் அன்லிமிட்டெட் 5G டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். ஆனால், உங்கள் பகுதியில் ஜியோவின் 5G நெட்வொர்க் இருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.
இந்த பிளானில் Jio TV, JioCinema மற்றும் JioCloud ஆகியவையும் சேர்ந்து வரும். எனினும் காம்ப்ளிமென்ட்ரி JioCinema சப்ஸ்கிரிப்ஷனில் JioCinema premium வசதிகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ.899 பிளான்: 999 ரூபாய் பிளானை போலவே, தினசரி 10 ரூபாயில் இதே பலன்களை கொடுக்கும் 90 நாள் பிளானையும் வைத்துள்ளது ஜியோ. ஜியோ வழங்கும் ரூ.899 பிளானின் வேலிடிட்டி காலம் 90 நாட்கள். வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் இலவசம். இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் யூசர்களுக்கு மொத்தம் 200 GB டேட்டா கிடைக்கும்.
யூசர்கள் ஒரு நாளைக்கு 2 GB டேட்டா மற்றும் கூடுதலாக 20 GB டேட்டாவை பெறுவார்கள். மேலும் இந்த பிளானை ரீசார்ஜ் செய்யும் யூஸர்கள் Jio TV, Jio Cinema மற்றும் Jio Cloud ஆகியவற்றிற்கான இலவச சப்ஸ்கிரிப்ஷனைப் பெறுவார்கள். அன்லிமிடெட் 5 ஜி டேட்டா வசதியும், இந்தத் திட்டத்தில் கிடைக்கும். இந்த பிளானுடன் அன்லிமிட்டெட் 5G டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.
தீபாவளி தமாக்கா ஆஃபர்: மேலும், ரூ. 899 பிளானை ரீசார்ஜ் செய்தால் தீபாவளி தமாகா ஆஃபராக மேலும் சில சலுகைகளும் கிடைக்கும். AJIO தளத்தில் ரூ.999க்கு மேல் ஆர்டர் செய்தால் ரூ.200 ஆஃபர் கிடைக்கும். மேலும், EaseMyTrip தளத்தில் ஃப்ளைட் அல்லது ஹோட்டல் புக் செய்தால் ரூ. 3000 வரை ஆஃபர் கிடைக்கும். மேலும், ஸ்விகியில் புதிதாக ரூ. 399க்கு மேல் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.150 ஆஃபர் கிடைக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications