1 லட்சம் சம்பளம்.. சென்னை ஏர்போர்டில் வேலை.. ஒருவருக்கு விரித்த வலையில் குடும்பமே ஏமாந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த ஓய்வுபெற்ற பெண் அதிகாரி கைதாகி உள்ளார். சென்னை விமான நிலைய கார்கோ பகுதியில் சரக்கு வாகனம் ஓட்டி வரும் ரவிக்குமார் என்பவரிடம் குமரிகலா என்பவர மாதம் ஒரு லட்சம் சம்பளம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்ற முயன்றுள்ளார். அந்த வலையில் விழுந்தவர், தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இப்படி ரூ.23 லட்சம் மோசடி செயத குமரிகலாவை போலீசார் கைது செய்தனர்.

பொதுவாக அரசு வேலைகள் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகம். அதனை வைத்து ஏமாற்றுவது அதிகரித்துள்ளது. விமான நிலையத்தில் வேலை என்று கூறி ஏமாற்றி உள்ளார்கள். சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற பெண் அதிகாரி செய்த மோசடி பற்றி பார்ப்போம்.

Chennai Airport job

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் என்பவர் சென்னை விமான நிலைய கார்கோ பகுதியில் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். இவரை ஸ்ரீபெரும்புதூர், மலையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமரிகலா என்பவர் சந்தித்துள்ளார். இவர் "மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளத்திற்கு ஏன் கஷ்டப்படுகிறாய்?, விமான நிலையத்திற்குள் வாகனம் ஓட்டும் வேலை வாங்கித் தருகிறேன். மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்கலாம்" என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

இதை நம்பிய ரவிக்குமாரை நூதனமாக ஏமாற்றி பணம் கறந்துள்ளார். விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதற்குப் பலருக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு ரூ.5 லட்சம் செலவாகும், ஆனால் நீ எனக்கு தெரிந்தவர் என்பதால் ரூ.3 லட்சம் கொடுத்தால் போதும் என்றும் குமரிகலா ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதுகுறித்து ரவிக்குமார் தனது மனைவியிடம் தெரிவித்தபோது, அவர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வேலை வாங்கித் தருமாறு அவர் பங்கிற்கு ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து, ரவிக்குமார் குமரிகலாவிடம் ரூ.15 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல், ரவிக்குமாரின் நண்பர்களான ஜெயா ரூ.3 லட்சம், விஜயகுமார் ரூ.1½ லட்சம், கிருஷ்ணமூர்த்தி ரூ.2.70 லட்சம், அச்சம்மா ரூ.80 ஆயிரம் என மொத்தம் ரூ.23 லட்சம் வரை குமரிகலாவிடம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

பணத்தைப் பெற்றுக்கொண்ட குமரிகலா, கடந்த சில ஆண்டுகளாக வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், பணம் கொடுத்தவர்கள் விமான நிலைய ஆணையக அலுவலகத்தில் விசாரித்தபோது, குமரிகலா விமான நிலைய ஆணையகத்தின் சரக்ககப் பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி விருப்ப ஓய்வுப் பெற்றுவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரிகலாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பணம் முழுவதும் செலவாகிவிட்டதாகவும், கையில் பணம் இல்லை என்றும், தனக்குப் பல்வேறு நோய்கள் இருப்பதால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாது என்றும் அவர் கம்பி நீட்டியிருக்கிறார். இதையடுத்து, மோசடி வழக்கில் குமரிகலாவைக் கைது செய்த போலீசார், அவரைக் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+