Job Alert:எழுத்து தேர்வு எதுவும் இல்லை.. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் உள்ள வேலைவாய்ப்புகள்
சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு எதுவும் இல்லாமல் இதற்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
CMDA எனப்படும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள 25 ஒட்டுநர் பணியிடங்களை நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க இன்னும் 10 நாட்களே உள்ளதால் வேலைதேடும் இளைஞர்கள் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு எழுதத்தேர்வு எதுவும் இல்லை என்பதால் தேவைப்படும் இளைஞர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலியிடங்கள்
மொத்த காலியிடங்கள் - 25
பணி: Driver (ஒட்டுநர்)
வயது வரம்பு - 18 வயது முதல் 32 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
மாத சம்பளம் என்ன - 9,500 ரூபாய் முதல் 62 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி
8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறைந்தபட்ச கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதர தகுதிகள் - ஓட்டுநர் உரிமை வைத்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் அனுபவம் கட்டாயம். மேலும், முதலுதவி பயிற்சி சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இவை தவிர உடல் தகுதி சரியாக உள்ளதை என்பதை நிரூபிக்க மருத்துவ சான்றிதழ் தேவை.

தேர்வு முறை
தேர்வு செய்யும் முறை - எழுத்துத் தேர்வு எதுவும் இல்லை. ஒட்டுநர் தேர்வு நடத்தப்படும். மேலும், வாகன பராமரிப்பு குறித்த செயல்முறை தேர்வும் நடத்தப்படும். இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்தும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் - OC / BC / BC (M) / MBC & DNC பிரிவைச் சேர்ந்தவர்கள், ரூ.300/- மற்றும் SC / ST பிரிவைச் சேர்ந்தவர்கள், ரூ.150/- க்கான விண்ணப்பக் கட்டணம் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது Online மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
https://cmdadirectrecruitment.in/ என்ற தளத்திற்குச் சென்ற இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். Online வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் முலாமாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி - அக்டோபர் 27, 2021
https://cmdadirectrecruitment.in/ என்ற தளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications