சொந்த ஊர் திருச்சி.. தவெகவின் அரசியல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி நியமனம்! யார் இவர்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளராக திருச்சியை பூர்வீகமாக கொண்ட ஜான் ஆரோக்கியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்ந்து தவெகவின் ஆதவ் அர்ஜுனா சேர்ந்து செயல்பட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான நடிகர் விஜய் அறிவித்துள்ளார். யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி? வாங்க பின்னணியை பார்க்கலாம்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் யார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. விஜய் முதல் முறையாக 2026ல் தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளார். அவரது கட்சியில் சீனியர் அரசியல் தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில் விஜய் யாரை ஆலோசகராக நியமிக்க உள்ளார்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வந்தது.

அந்த வகையில் நடிகர் விஜய், தனது தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமியை நியமிக்கலாம் என்ற பேச்சுகள் அடிப்பட்டு வந்தன. குறிப்பாக நடிகர் விஜய் கட்சி தொடங்கியது முதல் முதல் அரசியல் மாநாட்டை நடத்தியது வரை ஜான் ஆரோக்கியசாமி தான் அறிவுரை மற்றும் வியூகங்களை வகுத்து கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அந்த தகவல்களை யாரும் உறுதி செய்யவில்லை. இந்நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி தான் என்று நடிகர் விஜய் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திருச்சியை பூர்விகமாக கொண்ட ஜான் ஆரோக்கியசாமி, பல வெளிநாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளை பிரபலப்படுத்தும் பணியில் இருந்தவர். எம்ஏ ஆங்கிலம் மற்றும் எம்பிஏ படிப்பை ஜான் ஆரோக்கியசாமி முடித்துள்ளார். இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அங்கு ‛பெர்சனா டிஜிட்’ என்ற பெயரில் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
மேலும் அரசியல் வியூக வகுப்பாளராகவும் ஜான் ஆரோக்கியசாமி செயல்பட்டு வருகிறார். வடஇந்தியாவில் உள்ள பல கட்சிகளின் தலைவர்களுடன் அவர் நெருக்கமாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2019 மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஜான் ஆரோக்கியசாமி வியூகங்களை வகுத்து கொடுத்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது அதற்கு முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது 13 சீட் அதிகமாகும்.
அதற்கு முன்பாக கடந்த 2016 சட்டசபை தேர்தலின்போது பாமக தலைவர் அன்புமணி மேற்கொண்ட வித்தியாசமான பிரசாரத்தின் பின்னணியில் ஜான் ஆரோக்கியசாமி தான் இருந்ததாக கூறப்படுகிறது. 'மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி' என்ற வாசகத்துடன் அன்புமணி பிரசாரம் செய்தார். இந்த தேர்தலில் பாமக தனித்து களமிறங்கியது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. இந்த தேர்தலில் மொத்தம் 23 லட்சத்து 2,564 ஓட்டுகளை பாமக பெற்றது. இது 5.36 சதவீத ஓட்டாகும். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக ஒரு இடத்தில் கூட பாமக வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழலில் தான் ஜான் ஆரோக்கியசாமி தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா இன்று தவெகவில் இணைந்தார். இவருக்கு தவெகவில் தேர்தலில் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா ஏற்னவே திமுகவில் தேர்தல் வியூக வகுப்பாளர்களுடன் சேர்ந்து களநிலவரத்தை அறிந்து வைத்துள்ளார். இந்நிலையில் தான் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தவெகவில் ஜான் ஆரேக்கியசாமியுடன், ஆதவ் அர்ஜுனா சேர்ந்து செயல்பட உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
பெரம்பூரில் மூடிக் கிடக்கும் விஜய் தேர்தல் அலுவலகம்.. இவ்வளவுதான் தவெக தேர்தல் ஏற்பாடு! -
திருத்தணியில் தவெக வேட்பாளருக்கு வந்த தனிமை கொடுமை.. விஜய் கட்சியில் தெறித்து ஓடும் நிர்வாகிகள்? -
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
தவெக வேட்பாளரின் மச்சான் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் பறிமுதல்.. வாக்காளர்களுக்காக பதுக்கலா? -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல்குமார்.. அதிருப்தியில் தவெக! பின்னணியில் ராஜன் செல்லப்பா -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு












Click it and Unblock the Notifications