ஜான் பாண்டியன், டாக்டர் ராமதாஸ் திமுக கூட்டணியில்? அடேங்கப்பா எல்லாமே கமுக்கமாக நடக்குது போல.. பலே
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது தலைமையில் அமைவதே பாமக கூட்டணி, யாருடனும் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது, விரைவில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.. இதனால், டாக்டர் ராமதாஸ் எந்த கூட்டணியில் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தந்துள்ள பேட்டி ஒன்று, பெரும் கவனம் பெற்று வருகிறது.
பாமகவில் அப்பா டாக்டர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே பெரும் மோதல் நிலவி வருகிறது.. 2 பேருமே தனித்தனி ஆதரவாளர்களுடன் செயல்பட்டு, கட்சியை இரண்டு பிரிவுகளாக வைத்துள்ளனர்.

கடந்த வாரம் அன்புமணி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அக்கூட்டணியில் சேர்ந்ததை உறுதி செய்தார்... உடனே இதற்கு டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் தான் எந்த கூட்டணியில் சேர வேண்டுமென ஆராய்ந்து வருவதாக, விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறினார்.
திமுகவுக்கு புகழாரம்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாமக அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது. ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட்டாலும், ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.. எனவே இந்த முறை திமுக கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.
"4 ஆண்டுகளாக நடைபெறும் ஸ்டாலின் ஆட்சி நல்லபடியே உள்ளது" என்று டாக்டர் ராமதாஸ் திமுகவுக்கு புகழாரம் சூட்டியிருந்ததை இங்கு நினைவூட்ட வேண்டி உள்ளது..
அதுமட்டுமல்ல, விசிக தலைவர் திருமாவளவன் உள்ள கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "அரசியலில் எதையும் முன்கூட்டியே கணிக்க முடியாது. எதுவும் நடக்கலாம், எதிர்பாராத விஷயங்களும் நடக்கும். எதுவும் நடக்காது என்று உறுதியாக சொல்ல முடியாது" என்று கூறியிருந்த பதிலும், அரசியல் கட்சிகளின் கவனத்தை பெற்றன.
சூரிய கூட்டணி
எனினும்கூட, அய்யா கூட்டணி தொடர்பாக முடிவெடுப்பதில் தயக்கம் உள்ளதாக கூறுகிறார்கள்.. காரணம், திமுகவுடன் கூட்டணிக்கு போவதற்காகத்தான் இத்தனை செயல்பாடுகளும் நடந்ததா? என்று அன்புமணி தரப்பில் தேவையில்லாத விமர்சனங்கள் எழக்கூடுமே என்ற சந்தேகமும் உள்ளதாம்.
இருந்தாலும், திமுக கூட்டணியில் சேரும் வாய்ப்பு அதிகமா உள்ளதால், டாக்டர் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவியுள்ளது. ஆனால் ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைந்தால், அன்புமணி தரப்பின் விமர்சனத்தை சமாளிக்கும் திறனும் அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
மற்றொருபுறம், விசிக கூட்டணியில் இருந்து வெளியேறாமல் இருக்க, வடமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அமைச்சர் ராமதாஸுடன் தொடர்ந்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய திருப்பம் உருவாகியுள்ளது.
ஜான் பாண்டியன் - ராஜ கண்ணப்பன்
இப்படிப்பட்ட சூழலில்தான் மூத்த அமைச்சர் ராஜ கண்ணப்பனின் பேட்டி ஒன்று அரசியல் களத்தின் கவனத்தை பெற்று வருகிறது..
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக தேர்தல் பணிக்குழு தலைவரும், வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் துறை அமைச்சருமான ராஜ கண்ணப்பன், "சட்டமன்ற தேர்தலில் கட்சி யாரை நிறுத்தினாலும் அவர்களது வெற்றிக்காக பாடுபட வேண்டும். கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மதிமுகவினர் பெரும்பாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்பார்கள். இடதுசாரிகளும் விசிகவினரும் அவர்களது சின்னத்தில் நிற்பார்கள்.
கூட்டணிக்குள் ராமதாஸ் வந்து கொண்டிருக்கிறார், ராமதாஸ் பேசிக் கொண்டிருக்கிறார், ஜான் பாண்டியன் பேசிக்கொண்டிருக்கிறார். அதனால், கட்சி வேட்பாளர்களையும் கூட்டணி வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்..
ஃபார்மாலிட்டி போட்டி
திமுக கூட்டணி பிஸியாகி வரும் நிலையில், திமுக கூட்டணியில் பாமக வந்தால், விசிக கூட்டணியை விட்டு வெளியேறி ஒரு ஃபார்மலிட்டிக்காக தேர்தலை சந்திக்குமா? என்பது தெரியவில்லை..
மொத்தத்தில், பாமகவில் தந்தை-மகன் மோதல், கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் விசிக-விசிக எதிர்ப்பு போன்ற அனைத்துமே தமிழக அரசியலில் பரபரப்பை அதிகரித்து வருகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!












Click it and Unblock the Notifications