ஜான் பாண்டியன் கிட்ட வீரமணி வீடியோ இருக்கா? 5 மணி நேரம் எஸ்ஐடி விசாரணை.. வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் ஜான் பாண்டியனின் பெயர் எப்படி வந்தது? அவரிடம் அதிகாரிகள் என்ன விசாரித்தார்கள்?

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை புகாரில் கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 12 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் அவர் மீது 8 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

John Pandian Veeramani

ஜெம் வீரமணி - டிரைவர்கள்

இதில் 2வது வழக்கில் புழல் சிறையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில், தன்னை காரில் அழைத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட வீரமணியின் டிரைவர்கள் லாசர் மற்றும் பார்த்திபன் ஆகியோரை சிறுமி சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்..

இந்த வழக்கை சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது. வீரமணி, அவரது கூட்டாளிகள் சாந்தி, மகேந்திர சிம்மன் உள்ளிட்டோர் மற்றும் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் டிஜிட்டல் சான்றுகள், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வழக்கில் தொடர்புடைய 4 பேர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் வீரமணி மட்டுமல்லாமல், அவருடன் தொடர்புடையவர்கள், உதவியாளர்கள் மற்றும் கார் டிரைவர்கள் எனப் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஜான் பாண்டியனிடம் 5 மணி நேரம் விசாரணை

ஏற்கனவே, வீரமணி விவகாரத்தில் ஜான் பாண்டியனை வைத்து பேரம் பேசியதாக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். ஆனால், இக்குற்றச்சாட்டை உடனடியாக ஜான் பாண்டியன் மறுத்தார்..

வீரமணிக்கும் சாந்திக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில், காங்கிரஸ் பிரமுகர் அழைப்பின் பேரில்தான் சமரச பேச்சுவார்த்தைக்குச் சென்றதாகவும், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமல்ல, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் பரப்பப்படுவதாகவும், வீரமணி விவகாரத்தில் தன்னிடம் எந்த வீடியோ ஆதாரமும் இல்லை என்றும் செய்தியாளர்களிடமும் தெரிவித்திருந்தார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகவும், வீரமணி வழக்கில் ஜான் பாண்டியனுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் அவருக்கு தற்போது சம்மன் அனுப்பியது.. இதையடுத்து, சம்மனை ஏற்று நேற்று விசாரணைக்கு ஆஜரான ஜான் பாண்டியனிடம் அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.. இதில், சில முக்கிய தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

எதுவும் தெரியாது

குறிப்பாக, பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஜான் பாண்டியன் சொன்னாராம்.. மேலும், சாந்திக்கும் வீரமணிக்கும் இடையே ஏற்கெனவே இருந்த பிரச்சினை தொடர்பாகவே தன்னிடம் பேசியதாகவும் அவர் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் ஜான் பாண்டியனிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+