சித்தப்பா ஒரு மாற்றுத் திறனாளி என தெரிந்தும் அண்ணன் மகள் செய்த காரியம்.. திடுக்கிட்ட திங்கள்சந்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே கள்ளக்காதலனுடன் போனில் பேசியதைக் கண்டித்த மாற்றுத்திறனாளி சித்தப்பாவை கீழே தள்ளிவிட்டு அவமதித்த இளம்பெண், ஆத்திரமடைந்த சித்தப்பாவால் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பிரசாத் 34 வயதாகிறது.. கார்பெண்டர் வேலை செய்து வரும் இவருக்கும், சுபிதா (28) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.

Thingalsanthai Murder differently-abled uncle

கன்னியாகுமரி தம்பதி

இந்தத் தம்பதிக்கு 9 மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். வாழ்க்கை சுமூகமாகவும், மகிழ்ச்சியாகவும் சென்றுகொண்டிருந்தது.. ஆனால், திடீரென அனீஸ் என்பவர் மூலம், பிரச்சனை வெடித்தது..

தும்பவிளை பகுதியைச் சேர்ந்த அனீஸ் (30) என்பவருடன் சுபிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விஷயம் கணவர் அருண் பிரசாத்திற்கு தெரியவரவே, அவர் தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால், சுபிதா தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் அனீஸுடன் ரகசியமாகத் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

ஜவுளிக்கடை ஊழியர்

இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கோபித்துக்கொண்ட சுபிதா, அதே பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டுக்குச் சென்று தங்கினார். மேலும், நாகர்கோவிலில் உள்ள ஒரு பெரிய ஜவுளிக்கடையில் வேலைக்கும் சேர்ந்தார். கணவர் வீட்டில் இல்லாத நேரங்களிலும், மகன்கள் அப்பாவுடன் இருக்கும் சமயங்களிலும் அனீஸை தனது வீட்டுக்கே வரவழைத்து சுபிதா உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

சம்பவம் நடந்த நேற்று முன்தினம் இரவு, சுபிதா தனது செல்போனில் அனீஸுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த சுபிதாவின் சித்தப்பா ராஜேஷ் (45) அவரை சத்தமிட்டுள்ளார். ராஜேஷ் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். வாக்குவாதம் முற்றிய நிலையில், சுபிதா தனது சித்தப்பாவை ஆத்திரத்தில் கீழே பிடித்து தள்ளிவிட்டாராம்.. இதில் ராஜேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

மாற்றுத் திறனாளி சித்தப்பா

இதனால் கடும் கோபமடைந்த ராஜேஷ், தட்டுத்தடுமாறி எழுந்து சென்று, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சுபிதாவை சரமாரியாக வெட்டினார். தலை மற்றும் கைகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சுபிதா, அலறியடித்தபடி தனது பெட்ரூமுக்குள் ஓடிச் சென்று உள்பக்கமாகக் கதவைப் பூட்டிக்கொண்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் ரூமை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது, சுபிதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீஸ் ஸ்டேஷன் போலீசார், சுபிதாவின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்யவும் அனுப்பி வைத்தனர்..மேலும், கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்தப்பா அரிவாளால் வெட்டியதுமே பெட்ரூமில் உயிரை காப்பாற்றி கொள்ளவே ஓடியதால், அவர் உயிருடன் இருப்பதாக குடும்பத்தினர் நினைத்துள்ளனர்.. நேரம் ஆக ஆக அவர் வெளியே வராததால்தான் சந்தேகம் வந்து, கதவை உடைத்து பார்த்துள்ளனர்.. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் குமரி மக்கள் உறைந்து போயிருக்கிறார்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+