ஹெச்.ராஜா சொன்னது தான் இப்போ நடந்திருக்கு.. நேரு உள்விளையாட்டு அரங்கு பேனரில்.. 'ஜோசப் விஜய்'!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கான முழு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நீண்ட நாட்கள் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு இந்த முக்கிய தருணம் நடக்க உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் இந்த பதவியேற்பு விழாவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

'ஜோசப் விஜய்' என்ற பெயர்
நடிகர் விஜய் தன்னை எப்போதும் விஜய் என்று மட்டுமே அழைத்து வந்தார். ஆனால் பாஜக தலைவர் ஹெச்.ராஜா விஜய்யின் ஆதார் கார்டு விபரங்களை வைத்துக்கொண்டு பல்வேறு பொதுக் கூட்டங்கள் மற்றும் பேச்சுகளில் அவரை 'ஜோசப் விஜய்' என்று தொடர்ந்து அழைக்கத் தொடங்கினார்.
இதன் மூலம் விஜய் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்பினார். இந்த விவகாரம் தொடர்ந்து பேசப்படுவதைத் தவிர்க்கும் வகையில் விஜய் தானே முன்வந்து 'ஜோசப் விஜய்' என்று அழைக்கத் தொடங்கினார்.
இதுதான் விஜய் தீவிர அரசியலில் இறங்குவதற்கான நேரமாக மாறியது, இதற்கிடையில் தான் விஜய் மோடியை சந்தித்த நிகழ்வும், ரஜினி அரசியலுக்கு வரும் விஷயங்களும் நடந்தது வந்தது.
ஹெச்.ராஜா விஜய் மீது மத சாயம் பூச நினைத்தாலும் அவரது ரசிகர்கள் மத்தியிலோ அல்லது மக்கள் மத்தியிலோ அல்லது அவரது புகழிலோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கான பேனர்களில் முதலமைச்சர் பெயர் 'ஜோசப் விஜய்' என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

108 தொகுதி வெற்றி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தன. இந்த ஆதரவுகளுடன் தவெக பெரும்பான்மையை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து ஆளுநர் தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
50 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளே தொடர்ந்து ஆட்சி நடத்தி வந்த நிலையில், தற்போது தவெக மூன்றாவது கட்சியாக ஆட்சி அமைக்க உள்ளது. இது தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் தலைமையிலான புதிய அரசு எப்படிப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்தும், மக்களின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு நிறைவேற்றும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாளை நடைபெறும் பதவியேற்பு விழா இந்த புதிய அரசியல் அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும்.
-
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா? -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
ஜானை அனுப்புறேன்.. ராகுலிடம் சொன்ன விஜய்! தவெகவின் ரகசிய ஆயுதம் ஜான் ஆரோக்கியசாமி டெல்லி செல்கிறார்












Click it and Unblock the Notifications