அமித்ஷா சொல்கிறார்.. ஓ.பி.எஸ் தலையாட்டுகிறார்.. அதிமுக தொண்டர்கள்தான் பாவம்.. ஜோதிமணி
அடிமைகளின் கூடாரம் என்று அதிமுக-பாமகவை ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா இல்லாத அதிமுக, அடிமைகளின் கூடாரம் ஆகிவிட்டது என்று ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணிக்கு, மறைந்த ஜெயலலிதா மீதான அரசியல் பார்வை என்பது வேறு, தனிப்பட்ட உணர்வுள்ள பார்வை என்பது வேறு. ஆணாதிக்க அரசியல் சூழலில், இறுதிவரை போராடி எழுந்து நின்ற ஒரு பெண் என்ற முறையில் அபரிமிதமான மரியாதை வைத்தவர் ஜோதிமணி.

இன்று ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் என்பதால், தன் மரியாதையை ட்வீட் போட்டு செலுத்தி உள்ளார். அதே சமயத்தில் ஆளும் தரப்பையும், கூட்டணி வைத்த பாமகவையும் விமர்சித்துள்ளார்.
அந்த ட்வீட்டில், "இன்று ஜெ பிறந்ததினம். அவரில்லாத அதிமுக.அடிமைகளின் கூடாரமாகிவிட்டது. பாமக அதிமுக தலைமையகம் தாங்கள் வருவதற்கு தகுதியற்ற இடமென நினைக்கிறது. ஆசி பெற அதிமுக அவர்கள் இடம் செல்கிறது. அமித்ஷா இனி அதிமுக கிடையாது. நாங்கள் தான் என்கிறார். தலையாட்டுகிறார் ஓபிஎஸ். அதிமுக தொண்டர்கள் தான் பாவம்!" என்று பதிவிட்டுள்ளார்.
இன்று ஜெ பிறந்ததினம். அவரில்லாத அதிமுக.அடிமைகளின் கூடாரமாகிவிட்டது.பாமக அதிமுக தலைமையகம் தாங்கள் வருவதற்கு தகுதியற்ற இடமென நினைக்கிறது.ஆசி பெற அதிமுக அவர்கள் இடம் செல்கிறது. அமித்ஷா இனி அதிமுக கிடையாது.நாங்கள் தான் என்கிறார். தலையாட்டுகிறார் ஓபிஎஸ். அதிமுக தொண்டர்கள் தான் பாவம்!
— Jothimani (@jothims) February 24, 2019
ஒட்டுமொத்தமாக அதிமுகவை அடிமைகளின் கூடாரம் என்று ஜோதிமணி விமர்சித்து ட்வீட் போட்டாலும் இதற்கு பல கமெண்ட்கள் குவிகிறது. "ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது" என்றும், சொந்த கட்சி அழிவதை பார்த்து கவலைப்படாமல் அடுத்த கட்சியை பார்த்து கவலைப்படும் ஒரே நபர் ஜோதிமணிதான்" என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications