கருத்து சொன்னால் கருத்தால் எதிர்கொள்ளுங்க.. கல்லை எடுத்து அடித்தால் எப்படி.. ஜோதிமணி
கமல்ஹாசன் கூட்டத்தில் நடந்த வன்முறை குறித்து ஜோதிமணி ட்வீட் போட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: "கல்லை கொண்டு அடிப்பதுதான் ஜனநாயகமா? ஒரு கருத்து சொன்னால், அதுக்கு எதிர்கருத்தை சொல்வது விட்டுவிட்டு, கற்களை எடுத்து அடிக்க வருவது வன்முறை இல்லையா?" என்று ஜோதிமணி கமலுக்காக ட்வீட் போட்டுள்ளார்.
கமல் பள்ளப்பட்டியில் பேசி 5 நாள் ஆனாலும், காங்கிரசின் ஜோதிமணி இன்னைக்குதான் இது சம்பந்தமாக கருத்து சொல்லி உள்ளார்.

அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் பிசிஸயாக இருந்து வரும் ஜோதிமணி, நேற்று மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனின் கூட்டத்தில் செருப்பு வீச்சு விவகாரம் நடந்ததற்கு கொதித்தே போய் விட்டார்.
இது சம்பந்தமாக தனது ட்வீட்டில், "இந்தியாவின் முதல் தீவிரவாதி, தனது வாழ்நாளை இந்த தேசத்திற்காக அர்ப்பணித்து, சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய தேசப்பிதா மகாத்மாவைக் கொன்ற கோட்சேதான். தீவிரவாதிகளோடு மதத்தை இணைக்கத் தேவையில்லை. கமலின் கருத்தை இன்னொரு கருத்தால் மட்டும் எதிர்கொள்வதே ஜனநாயகம். கற்கலால் எதிர்கொள்வது வன்முறை" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட்டுக்கு பலரும் வரவேற்றும், எதிர்ப்பும் கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள். "இந்திராகாந்தி கொலைக்கு பழிக்கு பழியாக உன் கட்சி சீக்கியர்களை கொன்னீங்களே இதுக்கு பேரென்ன?" என்று ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்திராகாந்தி கொலைக்கு பழிக்கு பழியாக உன் கட்சி சீக்கியர்களை கொன்னீங்களே இதுக்கு பேரென்ன?
— தாண்டவராயன்🎯 (@mp_samy) May 16, 2019
இன்னொருத்தரோ எச்.ராஜாவை இதில கூட விட காணோம். "இதுக்குத்தான் எச். ராஜா அங்கங்க ஆள் செட் பண்ணி வெச்சுருக்காப்ள இது போல் சம்பவம் நடக்குலேனாதான் ஆச்சர்யப்படனும்..." என்று கேஷுவலாக சொல்லி விட்டு போகிறார்.
இதுக்குத்தான் எச்ச ராஜா அங்கங்க ஆள் செட் பண்ணி வெச்சுருக்காப்ள இது போல் சம்பவம் நடக்குலேனாதான் ஆச்சர்யப்படனும்...
— ryuvaraj (@ryuva010) May 16, 2019
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications