Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவின் சதிச்செயல்.. தமிழ்நாடு, பீகாரின் ஒற்றுமை! வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் ஜோதிமணி வார்னிங்

"பீகார் பாஜக தமிழ்நாட்டின்மீது, வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குவது திட்டமிட்ட சதிசெயலின் ஒருபகுதியே."

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மற்றும் பீகார் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணி ஆட்சி நடந்து வருவதால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் இங்கே வெற்றிபெற முடியாத சூழலில் தமிழ்நாடு பாஜக நிச்சயம் இந்த சதி செயலுக்கு துணை நிற்கும் என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான வட இந்தியர்கள் தங்கி பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் தாக்கப்படுவதாகவும், இந்தி பேசியதற்காக கழுத்தறுத்து கொல்லப்படுவதாகவும் கூறி போலியான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

பீகார் பாஜக ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வதந்தி வட இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பல முன்னணி வட இந்திய ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிட்டன. இந்த நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஆதாரங்களுடன் இந்த வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.

பீகார் அரசு

பீகார் அரசு

தேசிய அளவில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பாஜகவின் வேலை வதந்திகளை பரப்புவதே என்று விமர்சித்தார். இந்த நிலையில் நேற்று இதுதொடர்பாக விசாரிக்க பீகார் அரசு அமைத்த குழு தமிழ்நாட்டுக்கு வந்தது. அப்போது வதந்திகள் பகிரப்படுவதாக அந்த குழு விளக்கமளித்தது.

வதந்திர பரப்பியவர்கள் கைது

வதந்திர பரப்பியவர்கள் கைது

இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை செய்திக்குறிப்பை நேற்று வெளியிட்டது. அதில், "புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

வட இந்திய பத்திரிகையாளர்கள் மீது வழக்கு

வட இந்திய பத்திரிகையாளர்கள் மீது வழக்கு

இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A), 505(i)(b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 505(ii(b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகி மீது வழக்கு

பாஜக நிர்வாகி மீது வழக்கு

அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் செண்ட்ரல் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153(A), 504, 505(1)(b), 505(1)(c), 505(2) கீழ் பிரசாந்த் உமராவ் என்பவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரின் பெயரில் தனி அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் எச்சரிக்கை

போலீஸ் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள். அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஜோதிமணி

ஜோதிமணி

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பகிரப்படும் செய்து என்பது பாஜகவின் திட்டமிட்ட சதிசெயலின் ஒரு பகுதி என்று கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், தெரிவித்து உள்ளதாவது, "பாஜகவின் எந்தவொரு அமைப்பும் தனித்து இயங்குவதில்லை.

பாஜகவின் சதித்திட்டம்

பாஜகவின் சதித்திட்டம்

ஒட்டுமொத்த செயல் (சதி)திட்டத்தின் ஒரு பகுதியாகவே அவை இயங்கும். பீகார் பாஜக தமிழ்நாட்டின்மீது, வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குவது திட்டமிட்ட சதிசெயலின் ஒருபகுதியே. இதையொட்டி தமிழகம், பீகார் இரண்டு மாநிலங்களிலும் பதற்றத்தை உருவாக்குவதே அவர்கள் நோக்கம்.

 பாஜகவுக்கு எதிரான ஆட்சி

பாஜகவுக்கு எதிரான ஆட்சி

இந்த இரு மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக இங்கே வெற்றிபெற முடியாது. தமிழக பாஜக நிச்சயம் இச்சதிசெயலுக்கு துணை நிற்கும். இதை தனிப்பட்ட சம்பவமாக பார்க்காமல், நீண்டகால நோக்கில் திட்டமிடப்பட்ட ஒரு சதிசெயலாகவே அணுக வேண்டும்.

இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

சில கைதுகளோடு கடந்து போய்விடாமல் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த சதி செயலில் ஈடுபட்டிருப்பவர்களை இரு மாநில அரசுகளும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழ்நாடு, பீகார் மக்கள் வதந்திகளை நம்பாமல், இரு மாநிலங்களிலும் பதற்றத்தை, வன்முறையை விதைக்கும் பாஜகவின் சதிதிட்டத்தைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

பொறுப்பான முதலமைச்சர்கள்

பொறுப்பான முதலமைச்சர்கள்

இரண்டு மாநிலங்களிலும் அனுபவம் மிகுந்த, பொறுப்பான முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். பதற்றம் கொள்ளத் தேவையில்லை. குறிப்பாக வாட்ஸ் அப் வதந்திகளை நம்பவேண்டும். அமைதிப் பூங்காவான நமது மாநிலத்தை அவமதிக்கும், வன்முறையை விதைக்கும் பாஜகவிற்கு சரியான பாடம் புகட்டுவோம்." என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+