"பிரியங்கா பிரியங்கா பிரியங்கா".. குழந்தைக்கு பெயர் வைத்து இடுப்பில் தூக்கி கொஞ்சிய ஜோதிமணி
கரூர் பிரச்சாரத்தின்போது குழந்தைக்கு ஜோதிமணி பெயர் சூட்டினார்.
சென்னை: "ஜோதிமணி எனும் நான்" என்றுதான் அவரது ட்விட்டர் நம்மை அழைக்கிறது. நாள் தவறாமல் பிரச்சார செயல்பாடுகளை பதிவிட்டு வருகிறார் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி!
"எத்தனையோ பேர் இருக்க.. திரும்ப திரும்ப ஜோதிமணிக்கே எதுக்கு சீட் தரணும்.. 2 முறை சீட் தந்தும் தம்பிதுரையை அவரால ஜெயிக்க முடியல" என்று கட்சிக்குள்ளேயே போர்க்கொடி எழுந்தது. மற்றொரு தரப்பில் ஜோதிமணிக்கு பதிலாக அப்ஸரா ரெட்டியை வேட்பாளராக அறிவிக்கலாமே என்று ஒரு ஐடியாவும் தரப்பட்டது.
ஆனால் ராகுல் காந்தியின் நன்மதிப்பை பெற்ற ஜோதிமணிக்கு திரும்பவும் அடிச்சது அதிர்ஷ்டம்.. கரூத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே சாலைகள், சந்துபொந்து என ஒன்றையும் விடாமல் பிரச்சாரம் செய்கிறார்.

ஜோதிமணி
அதிலும் குழந்தைகள் என்றால் ஜோதிமணிக்கு ரொம்ப பிடிக்கும் போல.. எங்கு சென்று வாக்கு கேட்டாலும் அங்கு கட்டாயம் ஒரு கைக்குழந்தை இருக்கிறது. இது எதார்த்தமாக நடக்கும் விஷயம் என்றாலும், அந்த குழந்தையை தூக்கி கொஞ்சாமல் ஜோதிமணி விடுவதில்லை.

சமத்துவபுரம்
இப்படித்தான், நாகம்பட்டி பஞ்சாயத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பிரச்சாரம் செய்யும்போது ஒரு குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்து கொண்டு கொஞ்சினார்.

பிரியங்கா
அந்த குழந்தையும் ஜோதிமணியிடம் நன்றாக ஒட்டிக் கொண்டது. பிறகு குழந்தைக்கு பேர் வைக்க வேண்டும் என்று பெற்றோர் ஒரு கோரிக்கையை வைக்க.. உடனே ஜோதிமணி "பிரியங்கா" என்று பெயர் வைத்து தன் விசுவாசத்தை அங்கே காட்டிவிட்டார்.
|
பெயர் சூட்டினேன்
இதுசம்பந்தமான ட்விட்டையும் ஜோதிமணி பதிவிட்டுள்ளார். "நாகம்பட்டி பஞ்சாயத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ஒரு பெண் குழந்தைக்கு பிரியங்கா என்று பெயர் சூட்டினேன்."
"ஆன் தி வே" பிரச்சாரங்களில் ஜோதிமணி செய்யும் டச்சிங் டச்சிங் மேட்டர்.. கரூர் அதிமுக தரப்பினருக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறதாம்!
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications