தேர்தலில் அதிமுக வென்றால்.. அமைச்சரவையில் பாஜக நிச்சயம் இடம்பெறும்.. சொல்வது பத்திரிகையாளர் மணி!
சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், தமிழக அமைச்சரவையில் பாஜகவுக்கும் இடம் கொடுக்கப்படும் என்று பத்திரிகையாளர் மணி கணிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 4 மாதங்களாக அமித்ஷா கூட்டணி ஆட்சி என்பதை மாற்றாமல் பேசி வருவதாக கூறிய அவர், எடப்பாடி பழனிசாமிக்கும் இது தெரியும் என்றும் பேசி இருக்கிறார்.
நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியவை அதிமுக தொண்டர்கள் இடையே புயலை கிளப்பி இருக்கிறது. ஏனென்றால் ஏப்ரல் 11ஆம் தேதி அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்ட நாள் முதலே, அமித்ஷா தொடர்ச்சியாக என்டிஏ கூட்டணி ஆட்சி என்று பேசி வருகிறார். அதன்பின் 2 பொதுக்கூட்டம் மற்றும் 3 நேர்காணல்களிலும் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.

அதேபோல் கூட்டணி அறிவிப்பின் போது எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்று கூறிய அமித்ஷா, அதன்பின் ஒருமுறை கூட எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடவில்லை. அதிமுகவில் இருந்து ஒருவரே முதல்வராக இருப்பார் என்று அமித்ஷா தொடர்ச்சியாக பேசுவது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து பத்திரிகையாளர் மணி பேசுகையில், அண்ணாமலையை வைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என்று சொல்வது ஒரு வியூகமாக பார்க்கிறேன். ஏன் யாரும் சொல்லவில்லை என்று கேட்கும் போது, அண்ணாமலை சொல்லிவிட்டாரே என்று கூறிக் கொள்ளலாம். அதேபோல் 4 மாதங்களில் அமித்ஷா என்டிஏ கூட்டணி ஆட்சி என்று மட்டுமே அமித்ஷா சொல்லி வருகிறார்.
ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பார். ஆனால் பாஜக நிச்சயமாக அரசில் ஒரு அங்கம் வகிக்கும். பாஜக ஒருபோதும் அதனை விட்டுக் கொடுக்காது. இது எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றாக தெரியும். ஆனால் இப்போது அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார். அப்படி பொதுவெளியில் ஒப்புக் கொண்டால், அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் கூட, அது என்டிஏ கூட்டணி ஆட்சியாக இருக்கும். அதிமுகவின் தேய்மானத்தில் தான் பாஜகவின் வளர்ச்சி இருக்கிறது என்பதை அவர்கள் நம்புகிறார்கள். அதற்கேற்றபடியே பாஜக காய் நகர்த்தி வருகிறது. தனிப்பெரும்பான்மை பெறும் அளவிற்கு அதிமுகவுக்கு தொகுதி பங்கீட்டில் இடம் இருக்குமா என்ற கேள்வி உள்ளது.
நிச்சயமாக பாஜக நிர்வாகிகளை உள்ளடக்கிய ஒரு அமைச்சரவை அமையும். அதற்கு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பார். கூட்டணி ஆட்சி என்று பேசுவது அதிமுக தொண்டர்களுக்கு சோர்வை மட்டுமே அளிக்கும். அதனை தெரிந்துதான் அமித்ஷா 4 மாதங்களாக பேசி வருகிறார். திமுகவுக்கு எதிராக இருக்கக் கூடிய இருக்கையை கணிசமான அளவிற்கு தாங்கள் நிரப்ப வேண்டும் என்று பாஜக தீவிரமாக உள்ளது.
பாஜக பலவீனமாக இருக்கக் கூடிய, இருந்த மாநிலங்களில் என்ன செய்தார்களோ, அதனை தமிழ்நாட்டில் செய்து வருகிறார்கள். அதற்கான அடித்தளத்தை பாஜக அமைத்து வருகிறது. அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தேவை என்பதை அமித்ஷா பேசி இருக்கிறார். அதிமுகவுக்கு உள்ள அழுத்தம் காரணமாக பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications