சீரியஸாக வாதிட்ட லியோ தயாரிப்பு தரப்பு.. குறுக்கிட்ட நீதிபதி.. நகைச்சுவையாக என்ன கேட்டார் தெரியுமா?
சென்னை: லியோ திரைப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கில் நீதிபதி நகைச்சுவையாக ஒருவிஷயத்தை குறிப்பிட்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கதில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்த நிலையில், 'லியோ' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிடலாம், காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிபதி அனிதா சம்பத் முன்பு அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. லியோ படத்தை திரையிட காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நடைபெற்றது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , 19ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம். ஆனால் 5 காட்சிகளுக்கு தான் அனுமதி அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார். காலை 9 மணிமுதல் இரவு 1.30 வரை தொடர்ந்து ஐந்து காட்சிகளை இடைவெளி இல்லாமல் ஒளிபரப்புவது சிரமம் என தெரிவித்தார்.
அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு சென்னைக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
இந்த வழக்கின் தீர்ப்பை இன்று சொல்வதாக நீதிபதி ஒத்திவைத்திருந்தார். அந்த வகையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பொது நல வழக்கு என்பது ஹீரோ கலாச்சாரம் பற்றியது என தெரிவித்தார். விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதன்படி எங்களுக்கு விலக்கு அளிக்கலாம்
என்றும் வாதிட்டார்.
மேலும் காலை நான்கு மணிக்கு ரசிகர் காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும்,
மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய நடிகரின் படம் என்றும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அனைத்து காட்சிகளும் ரசிகர்கள் காட்சிதானே என நகைச்சுவையோடு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஏற்கெனவே 5 காட்சிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது , சினிமாவின் கால அவகாசம் குறித்து அவர்கள் குறிப்பிடவில்லை, விதிகளை மீற முடியாது என தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஏன் ஏழு மணிக்கு அனுமதிக்க கூடாது ? இன்டர்வல் நேரத்தை 15 நிமிடமாக குறைக்க முடியாதா எனவும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, இன்டர்வேல் நேரம் என்பது தியேட்டர் உரிமையாளர்கள் விளம்பரத்தை முடிவு செய்வது எனவும், ஏற்கெனவே ட்ரைலர் வெளியிட்டபோது தியேட்டர்கள் சேதப்படுத்தப்பட்டது, தியேட்டரில் ரசிகர்கள் காட்சியின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது, ரசிகர்கள் இறந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை முக்கியம் என தெரிவித்தார். 20 நிமிடங்களுக்கு இடைவெளி விட வேண்டுமென்ற எந்த கட்டாயமும் இல்லை என தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications