நீதிபதி பத்மா காட்டிய அதிரடி.. 'தமிழகத்தின் எப்ஸ்டின்' தொழிலதிபர் வீரமணி சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 12 முதல் 16 வயது வரையிலான சிறுமிகளுக்குப் பணம், கைபேசி (Cell Phone), சாக்லேட் கொடுத்துப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 'ஜெம் கிரானைட்ஸ்' உரிமையாளர் வீரமணி மீதுள்ள வழக்கு விவகாரம், காவல்துறையைத் தாண்டிப் பொதுவெளியில் வெளிவந்தது எப்படி? எந்தவிதமான சிசிடிவி (CCTV) ஆதாரங்களையோ அல்லது பாதிக்கப்பட்ட சிறுமிகளையோ கண்டறியாமல், வழக்கை அவசர அவசரமாக முடித்து வைக்கும் வகையில் காவல்துறை 'குளோஸர் ரிப்போர்ட்' (Closer Report) தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா காட்டிய அதிரடியால் தொழிலதிபர் வீரமணி எப்படிச் சிக்கினார் என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

சாக்லேட், பணம் கொடுத்துச் சீரழிவு

13 முதல் 16 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை இலக்காக வைத்தே வீரமணி செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுமிகளை அழைத்துச் சென்று பணம், கைபேசி மற்றும் சாக்லேட்டுகளைக் கொடுத்து ஆசை வார்த்தை கூறுவார்.

Judge Padma s decisive move How was Tamil Nadu s Epstein businessman Gem Veeramani nabbed

காவல்துறையிடம் சிக்கிய வீடியோ ஒன்றில், சிறுமி ஒருவருக்குப் புதிய கைபேசியைப் பரிசாகக் கொடுக்கிறார்; அந்தச் சிறுமி அதற்கான பெட்டியைப் பிரிக்கும்போதே, வீரமணி அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலத்தின்படி, கடந்த 2003-ஆம் ஆண்டு முதலே வீரமணி இந்தக் கொடூரக் குற்றங்களைத் தொடர்ந்து செய்து வந்ததாகத் தெரிகிறது.

காவல்துறையின் 'குளோஸர் ரிப்போர்ட்'

கடந்த 2025 அக்டோபர் மாதமே வழக்கு பதிவு செய்யப் பட்டிருந்தாலும், கடந்த ஆகஸ்ட் மாதம் தான் வீரமணி கைது செய்யப்பட்டார். இதற்கு முன், கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி காவல்துறை தாக்கல் செய்த 'குளோஸர் ரிப்போர்ட்டில்' பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது:

"குறிப்பிட்ட தோற்றத்தில் உள்ள நபரைப் பற்றிய தகவல்களை இரகசியமாக புலனாய்வு செய்து, அவரைக் கண்டுபிடிப்பதற்கு உண்டான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்ட நிலையில், பதிவில் உள்ள நபரைப் பற்றிய தகவல்கள் எதுவும் கண்டறிய இயலவில்லை. மேலும், கிடைக்கப்பெற்ற வீடியோ பதிவு கடந்த 2019-ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது எனத் தெரியவருகிறது.

அதனால் சைபர் நிபுணரை த்துச் சந்தேகத்திற்குரிய 'டிவிஆர்' -ஐ சோதனை செய்தபோது, 6 ஆண்டுகள் கடந்துவிட்டதால் அடிப்படைப் பதிவுகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துவிட்டனர். புகாரில் சொல்லப்பட்ட சந்தேக நபர்கள் இதற்கு முன்பு ஏதேனும் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என CCTNS இணையதளத்தில் ஆய்வு செய்தபோதும், அவ்வாறு எதுவும் இல்லை எனத் தெரியவந்தது. மேலும், பதிவில் உள்ள சிறுமி போன்ற தோற்றமளிக்கும் நபரின் வயது தொடர்பான தகவலையும் வரையறுக்க இயலவில்லை.

எனவே, இந்த வழக்கை மேற்கொண்டு விசாரணை செய்து முன்னெடுத்துச் செல்லத் தற்போதைக்கு முகாந்திரம் இல்லாததால், வழக்கின் நடவடிக்கையை முடித்துக்கொண்டு (Further Action Dropped), வாதிக்கு RC.No.01/RCS/2026 Dt.18.02.2026 தேதியன்று நேரில் சான்றளித்து, இந்த இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு Crl.OP (MD) Nos.10290, 10329, 10659, 11358, 12469, 12555 & 13002 of 2025 Dated.25.11.2025-ன்படி, எதிர்வரும் காலத்தில் இது தொடர்பாக ஏதேனும் ஆதாரமோ சாட்சியங்களோ கிடைக்கப்பெற்றால் நீதிமன்ற உத்தரவுப்படி மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என்று கூறப்பட்டிருந்தது.

நீதிபதி பத்மா சண்முகசுந்தரத்தின் அதிரடி

பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காணவோ, கண்டுபிடிக்கவோ முடியவில்லை என்று கூறி வழக்கைக் காவல்துறை மூடி மறைக்க முயன்றது. குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்ற காவல்துறையின் இந்த முயற்சியைப் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா சண்முகசுந்தரம் கடுமையாக எதிர்த்தார். "வீடியோ ஆதாரம் இருந்தும் குற்றப் பின்னணியை எப்படி உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை?" என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பிய நீதிபதி, வழக்கை மீண்டும் விரிவாக விசாரிக்க உத்தரவிட்டார். நீதித்துறையின் இந்த அதிரடித் தலையீடு வழக்கின் போக்கையே முழுமையாக மாற்றியது.


காவல்துறை தீவிர விசாரணை

இதையடுத்து, த.வெ.க. ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்த சூழலில், கடந்த ஜூலை மாதம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. சென்னை காவல் ஆணையர் அமல்ராஜின் உத்தரவின் பேரில் வழக்கு தீவிரமடைந்தது. விசாரணையின் போது, வழக்கில் தொடர்புடைய சாந்தியின் வீட்டில் காவலத்துறை மீண்டும் சோதனை நடத்தியது. அப்போது, அங்கிருந்த ஒரு மின்னணு சாதனத்தில் இருந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அசல் வீடியோ பதிவு, சாந்தியால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் மற்றும் கைபேசி பதிவுகள் எனப் பல முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றினர். மேலும், ஆதாரங்களை அழிக்க முயன்றதற்கான அறிகுறிகளையும் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், வீடியோவில் காணப்பட்ட நபர் 'ஜெம்' வீரமணிதான் என உறுதியாக அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிறையில் வாக்குமூலம்

தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாங்கி, அதைச் சாந்தி மற்றும் அவரது கணவரின் பொறுப்பில் வீரமணி ஒப்படைத்துள்ளார். அங்குப் பல சிறுமிகளைக் கூட்டிவந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. எழும்பூர் நீதிமன்ற அனுமதியுடன் புழல் சிறையிலேயே வீரமணியிடம் 3 நாட்கள் விபசார தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தனது கொடூரச் செயல்கள் குறித்தும், தன்னைக் குறிப்பிட்டு சிலர் மிரட்டிப் பணம் பறித்தது குறித்தும் வீரமணி விரிவான வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், தனது உயிருக்கு அச்சறுத்தல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சொத்துப் பட்டியல் தயாரிப்பு

அவர் அளித்த வாக்குமூலத்தை வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பெற்றுக்கொண்ட காவல்துறை, அதை அடிப்படையாக வைத்துச் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், அவரை மிரட்டிப் பணம் பறித்த காவல் அதிகாரிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் எனத் தனித்தனி பெயர் பட்டியலைத் தயார் செய்துள்ளனர். இதில், ஒவ்வொருவருக்கும் உள்ள தொடர்பு, அவர்களின் சொத்துப் பட்டியல் மற்றும் அதிகாரத்தை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தினார்கள் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடந்து வருகிறது.


தமிழகத்தின் 'எப்ஸ்டீன்'

சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் நீதிபதி பத்மா ஆகியோரின் உறுதியான நடவடிக்கையால் வீரமணி இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் 'எப்ஸ்டீன்' (Epstein) என்று ஊடகங்களால் வர்ணிக்கப்படும் ஜெம் வீரமணி, இனி சிறையில் இருந்து வெளியே வருவது கடினம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

உண்மை தெரிந்தாக வேண்டும்

அதேநேரம், "ஆரம்பத்தில் இந்த வழக்கு எப்படி மூடப்பட்டது? குளோசர் ரிப்போர்ட்டைக் காவல்துறை ஏன் தாக்கல் செய்தது? குறிப்பிட்ட காவல் அதிகாரியின் பணியை மேற்பார்வை செய்ய வேண்டிய உயர் அதிகாரிகள் ஏன் இதை அனுமதித்தனர்?" எனப் பல கேள்விகள் எழுகின்றன. இதற்கான விடைகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+