ஜூலை மாத ராசிபலன்..அற்புத யோகத்தால் ஜோடி சேரப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?
ஜூலை மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் கை கூடி வரும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். ஜூலை மாதத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.
சென்னை: ஜூலை மாதம் பிறக்கப்போகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் குதூகலமான மாதமாக அமையப்போகிறது. ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு என்று பாடலே உள்ளது. ஐந்து கிரகங்கள் அற்புதமான நிலையில் ஆட்சி பெற்று பயணம் செய்வது சிறப்பு. ஜூலை மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு எந்தமாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். செவ்வாய் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும், கும்ப ராசியில் சனிபகவானும் பயணம் செய்வார்கள். சந்திரன் மாத முற்பகுதியில் கடக ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார்.
புதன் ரிஷபம், மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார். சந்திரன் மாத முற்பகுதியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார்.
இந்த மாதம் கும்பம் தொடங்கி மிதுனம் வரை வரிசையாக ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து உங்கள் ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. உங்களுக்கு இது அற்புதமான மாதம். தொழில் காரகன் சனி பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வேலையில் ஆதாயம் அதிகரிக்கும். சனிபகவான் சாதகமாக இருக்கிறார். மேஷ ராசியின் மீது சனியின் பார்வை விழுகிறது. செவ்வாய், ராகுவின் மீது சனியின் பார்வை விழுவது சாதகம். மாத பிற்பகுதியில் சனி வக்ர பெயர்ச்சியாகி மகரம் ராசிக்கு செல்கிறார். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தேடி வரும்
கிரகமாலிகா யோகம் கூடி வரப்போகிறது. ராசிநாதன் மாதம் முழுவதும் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். தலையெழுத்தே மாறப்போகிறது. வெற்றிகள் கைகூடி வரப்போகிறது. அதிர்ஷ்டம் வீடு தேடி வரப்போகிறது. ராசியில் உள்ள ராகு, செவ்வாய் கூட்டணி சில நேரங்களில் கோபத்தை ஏற்படுத்தும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சாதனையாளராக மாறப்போகிறீர்கள்.

கணவன் மனைவி நெருக்கம்
ராகு கேது பயணம் சாதகமாக இருந்தாலும் சில தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தடைகளைத் தாண்டி சுபகாரியங்கள் நடைபெறும். குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சுக்கிரன் யோகத்தை கொடுப்பார். நிறைய சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். விட்டுக்கொடுத்து செல்லவும்.

புது முயற்சிகளில் வெற்றி
மாதம் முழுக்க புத ஆதிபத்ய யோகம் உள்ளது. மாணவர்களுக்கு புதிய முயற்சிகள் பலிதமாகும். முயற்சி ஸ்தானத்தில் சூரியன் மாத முற்பகுதியிலும் நான்காவது வீட்டில் மாத பிற்பகுதியிலும் சூரியன் பயணம் செய்வது சிறப்பு. வெளியூர் சென்று படிக்க விரும்புபவர்களுக்கு யோகம். குருவின் பார்வை குதூகலத்தை தரும். ராசிநாதன் செவ்வாய் ராகு உடன் இருப்பதால் படிப்பில் அக்கறை செலுத்துங்கள். குழப்பத்தை விட்டுத்தள்ளுங்கள்.

குல தெய்வ கோவில்
மாத பிற்பகுதியில் புதன் கடக ராசியில் பயணம் செய்வார். சூரியனும் கடகராசிக்கு மாறுவது சிறப்பு.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். டென்சன், கோபம், பதற்றத்தை கட்டுப்படுத்துங்கள். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். தியானம் செய்து மன அமைதிபடுத்துங்கள். அவ்வப்போது குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவது நல்லது. சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.

கிரகமாலிகா யோகம்
கிரகமாலிகா யோகம் கை கூடி வரப்போகிறது. காரணம் கிரகங்கள் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது சாதகமான அம்சம். சத்ரு சம்ஹார ஹோமம் செய்வது அவசியம். இந்த மாதம் அற்புதமான மாதம் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது. முருகப்பெருமானின் அருளாசி கிடைக்கும். மொத்தத்தில் இந்த மாதம் விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications