Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் மாதம் ராசி பலன் 2020 - மேஷம், ரிஷபத்திற்கு பொருளாதார நிலை எப்படி

2020 ஆம் ஆண்டின் ஆறாவது மாதம் ஜூன் பிறக்கப் போகிறது. கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்துடனேயே நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஜூன் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2020ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்து உலகம் முழுவதுமே பிரச்சினைதான். கொரோனா வைரஸ் பீதியால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு உலக பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. பிறக்கப் போகும் ஜூன் மாதத்தில் மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமை எப்படி இருக்கும். ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

ஜூன் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார், மிதுனம் ராசியில் ராகு, ஆட்சி பெற்ற புதன், தனுசு ராசியில் கேது மகரம் ராசியில் சனி வக்ரம், குரு வக்ரம், கும்பம் ராசியில் செவ்வாய், கன்னி ராசியில் சந்திரன் என மாதம் ஆரம்பிக்கிறது.

ஜூன் 14ஆம் தேதி சூரியன் மிதுனம் ராசிக்கு மாறி ராகு, புதனோடு இணைகிறார். 18ஆம் தேதி செவ்வாய் மீனம் ராசிக்கு நகர்கிறார். மிதுனம் ராசியில் உள்ள புதன் வக்ர ஆரம்பமாகிறது. ஜூன் 25ஆம் தேதி சுக்கிரன் வக்ரம் முடிகிறது. ஜூன் 29ஆம் தேதி தனுசு ராசியில் கேது உடன் இணைகிறார் குரு பகவான். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் மேஷம் மற்றும் ரிஷபம் ராசிக்கு என்னென்ன சாதக பாதகங்களை தரப்போகிறது என்று பார்க்கலாம்.

பேச்சில் கவனம்

பேச்சில் கவனம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே குடும்ப ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் உஷ்ணமான பேச்சுக்களை தவிர்க்கவும். 14ஆம் தேதிக்கு மேல் சூரியன் 3ஆம் வீட்டிற்கு போன பின்னர் பிரச்சினைகள் குறையும். இல்லத்தரசிகளுக்கு இந்த மாதம் முற்பகுதியில் மந்தமாகவே இருக்கும். உங்களின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்படும். பேச்சில் கவனமாக இருங்க எதையும் யோசித்து பேசுங்க. கடன் பிரச்சினைகள் தீரும். பணவரவு அபரிமிதமாக இருக்கும். சனி குரு வக்ரமடைந்திருப்பது உங்களுக்கு நன்மைதான்.
லாப ஸ்தானத்தில் இருக்கிற செவ்வாய் பகவானால் வியாபாரத்தில் லாபம் வரும்.

வெற்றிகரமான மாதம்

வெற்றிகரமான மாதம்

மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. கிடைத்திருக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். உயர்கல்விக்காக ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க. சனி பகவான் சில நன்மைகளை தருவார். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். திருமணத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்கள் மாத பிற்பகுதியில் சுப காரியங்களை பேசி முடிவு செய்யலாம். நீங்க எதிர்பார்த்த வேலைகள் சாதகமாக அமையும். சிலர் வீட்டில் இருந்தே பார்க்கும் வேலைகளை உற்சாகமாக செய்வீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

விரைய செலவுகள் வரும்

விரைய செலவுகள் வரும்

மாத பிற்பகுதியில் சூரியன் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீடான மிதுனம் ராசிக்கு நகர்ந்து புதன் உடன் இணைகிறார். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும். அதே நேரத்தில் சூரியன் 3வது வீட்டில் இருப்பதால் அரசு மூலம் கிடைக்கக் கூடிய பலன்களில் சில தடைகள் ஏற்படலாம்.பிசினஸ் செய்பவர்கள், வியாபாரிகளுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டது. செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு வருவதால் மாத பிற்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். உங்க வாழ்க்கைத்துணையிடம் மனசு விட்டு பேசுங்க பிரச்சினைகளை சால்வ் பண்ணுங்க.

சந்தோஷங்கள் சங்கடங்கள்

சந்தோஷங்கள் சங்கடங்கள்

குரு சனி கூட்டணி இந்த மாத இறுதியில் பிரிகிறது உங்களுக்கு பல நன்மைகள் நடைபெறும். சுய தொழில் செய்பவர்களுக்கு வங்கிக்கடன் வாங்கி முதலீடு போட வேண்டாம் நேரம் சரியில்லை. வேலை செய்பவர்கள் வேலையில் கவனமாக இருங்க. அம்மனை தியானம் செய்யுங்கள் லாக்டவுன் காலத்தில் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இந்த மாதம் சந்தோஷங்களை விட சங்கடங்களும் நடைபெறும் என்பதால் தினசரி அம்மன் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வைத்து வழிபடுங்கள். ஜூன் 4 பிற்பகலுக்கு மேல் 5,6ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். பேச்சில் கவனமாக இருங்க. வீண் வாக்குவாதம் வேண்டாம்.

ஆரோக்கியம் அற்புதம்

ஆரோக்கியம் அற்புதம்

ஜூன் மாதத்தில் ரிஷபம் ராசிக்கு உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சுக்கிரனால் இந்த மாதம் பிரமாதமாக இருக்கும் சூரியன் உங்க ராசியில் சுக்கிரன் உடன் சேர்ந்திருக்கிறார். உடல் கொஞ்சம் உஷ்ணமாக இருக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் வரலாம். பேசும் வார்த்தைகளில் கவனமாக இருங்க ஒருவார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும். உங்கள் சொல்லும் செயலும் கவனமாக இருக்கட்டும். ரொம்ப பொறுமையாக இருங்க. வருமானம் நன்றாக இருக்கும் கூடவே செலவுகளும் வரும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

காதல் விவகாரங்களில் கவனமாக இருக்கும். ஏமாற்றத்திற்கு ஆளாக நேரிடும். மனதை அலைபாய விடாதீங்க. திருமணம் பற்றிய பேச்சுக்களை இந்த மாதம் பிற்பகுதியில் ஆரம்பிங்க சுபமாக முடியும். வரன் தேடுபவர்கள் ஆன்லைன் மூலம் தேடினாலும் பொறுமை அவசியம். இந்த மாதம் கவலையில்லாத மாதம். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். யோகங்கள் தேடி வரும் காலம். எதையும் சிறப்பாக செய்வீர்கள்.

வேலையில் கவனம்

வேலையில் கவனம்

குருவின் வக்ர பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. மேற்படிப்பு தேர்வு செய்யும் போது பெற்றோர்கள் ஆசிரியர்களின் ஆலோசனை அவசியம். செய்யும் வேலையில் கவனமாகவும் உற்சாகமாகவும் வேலை பாருங்க. உடன் வேலை செய்பவர்கள் போட்டு தாக்க தயாராக இருக்காங்க கவனமாக இருங்க. எச்சரிக்கையாகவும் இருங்க. வீண் வம்புகள் வரலாம். உயரதிகாரிகளிடம் பேசும் போது மூன்றாம் நபர் தலையீடு வச்சிக்காதீங்க. நீங்களே நேரடியாக பேசுங்க. உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் கவனமாகவும் இருக்கவும்.

வியாபாரத்தில் லாபம்

வியாபாரத்தில் லாபம்

கொரோனா லாக் டவுன் காலம் இப்படி இழுத்துக்கிட்டே போகுது எப்போது முடிவுக்கு வரும் தொழில் வியாபாரத்தில் என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள் விரைவில் முடிவுக்கு வரும். முன்னேற்றத்திற்கான கால கட்டம். இந்த மாதம் வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். சிலர் புது தொழில்களை செய்வீர்கள். சந்திராஷ்டம் ஜூன் 7ஆம் தேதி தொடங்கி 8, 9ஆம் தேதி காலை வரை தேதிகளில் கவனமாக இருக்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+