"பாய் மேல பூ போட்டு.. படிப்போமா புதுபாட்டு".. தெரியாம பண்ணிட்டேன்.. ஸாரி.. கெஞ்சிய டிக்டாக் நடிகை

போலீஸ் உடையில் டிக்டாக் வீடியோ செய்த நடிகை மன்னிப்பு கேட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பாய் மேல பூ போட்டு.. படிப்போமா புதுப்பாட்டு" என்று டிக்டாக்கில் மூழ்கி கிடந்த துணை நடிகை ஸ்ரீனிகா, இன்று மனம் வருந்தி "ஐ ஆம் ஸாரி.. தெரியாம பண்ணிட்டேன்" என்று வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். இதற்கு காரணம், போலீஸ் உடை அணிந்து ஸ்ரீனிகா டூயட் பாடியதுதான்!

Recommended Video

    'பாய் மேல பூ போட்டு.. படிப்போமா புதுபாட்டு'.. தெரியாம பண்ணிட்டேன்.. ஸாரி.. கெஞ்சிய டிக்டாக் நடிகை - வீடியோ

    டிக்டாக் ஒரு நல்ல மோடிவேஷனல் சமாச்சாரம்தான்.. ஆஹா ஓஹோ என்று இல்லாவிட்டாலும், ஓரளவு வரவேற்கவே செய்யலாம்.. அதுகூட திறமைசாலிகளுக்கு மதிப்பு தர வேண்டும் என்ற ஒரே ஒரு உணர்வுக்காக மட்டுமே!

    ஆனால், இந்த டிக்டாக் மோகம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.. திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற உந்துதல், ஆசைகளையும் தாண்டி... "லைக்" வாங்குவதற்காக எந்த லெவலுக்கும் துணியும் அளவுக்கு வந்துவிட்டனர்.. இதற்கு இளைஞர்கள், பெண்கள் உட்பட யாருமே விதிவிலக்கல்ல. எத்தனையோ பேர் தற்கொலை, கொலை, விபத்து என உயிரை மாய்க்க காரணமாகி கொண்டிருக்கிறது.. இதுபோக இதுவரை சேர்த்து வைத்த மொத்த மானமும் சந்தி சிரிக்கும் அளவுக்கும் எல்லை மீறுகிறது. அப்படி ஒரு வில்லங்க சம்பவம்தான் இது!

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    போலீசாரை விமர்சித்தும், நக்கலடித்தும் இது வரை டிக்டாக் செய்தவர்கள் கம்பி எண்ணி கொண்டுள்ளனர்.. காவல்துறையை இப்படி விமர்சித்து வீடியோ போடக்கூடாது என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.. ஆனாலும் மீண்டும் ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது.. பெண் போலீஸ் டிரஸ் அணிந்து டிக்டாக் வீடியோ இருந்தது... மேலும் அந்த பெண் அதே உடையில் டூயட்டும் பாடினார்.. விசாரணையில் ராதிகா என்ற ஐடியிலிருந்து அந்த வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டதை சைபர் க்ரைம் போலீஸார் கண்டறிந்தனர்.

    ஸ்ரீனிகா

    ஸ்ரீனிகா

    இதன்பிறகு அந்த பெண்ணை பற்றின கூடுதல் விவரங்களையும் சேகரித்தனர்.. அவர் பெயர் ஸ்ரீனிகா.. நர்ஸாக ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை பார்த்தவர்.. இப்போது துணை நடிகையாகவும் நடித்துவருகிறார். ஏதோ ஒரு படத்தில் பெண் போலீஸ் கேரக்டரில் நடித்தபோதுதான், இந்த டிக்டாக் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார் என்பது தெரியவந்தது..இந்த வீடியோ இல்லாமல் அவர் நர்ஸாக வேலை பார்த்தபோதே, அந்த டிரஸ்ஸிலும் டிக்டாக் வீடியோ செய்துள்ளார்.. "பாய் மேல பூ போட்டு.. படிப்போமா புதுப்பாட்டு".. என்றும், "தனிமை உனை சுடுதா" என்றும் பல டூயட் பாடல்கள் பிரபலமாகவே காணப்படுகின்றன.

    லைக்குகள்

    லைக்குகள்

    இதையடுத்து போலீசார் ஸ்ரீனிகாவை எச்சரித்தனர்... இவருக்கு டிக்டாக் என்றால் பிரியமாம்.. ஆனால் அவரது வீடியோக்களுக்கு நிறைய லைக்குகள் கிடைக்கவில்லை.. அந்த லைக்கிற்கு ஆசைப்பட்டுதான் போலீஸ் யூனிபார்மில் டூயட் பாட்டுக்களை பதிவிட்டுள்ளார்.. இந்த வீடியோ அதிகளவு ஷேர் ஆனதற்கு காரணம், ஸ்ரீனிகாவை எல்லாரும் நிஜ போலீஸ் என்றே நினைத்துவிட்டதுதான்.. இப்போதைக்கு அவரை போலீசார் எச்சரித்து, இனீமேல் இப்படியெல்லாம் வீடியோ போடக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    இதன்பிறகு ஸ்ரீனிகா மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அதில், "என் வீடியோ எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டேன்.. தெரியாம டிக்டாக் போட்டுட்டேன்.. ஸோ ஸாரி.. இனி என் வீடியோ ஒன்னுகூட வராது.. ஐஆம் சாரி" என்று தெரிவித்துள்ளார். இப்படி பேசும்போது ஸ்ரீனிகாவின் குரல் மட்டுமே கேட்க முடிகிறது.. ஆனால் முகம் காட்டி கொள்ளவில்லை. ஆனால் இவ்வளவு பெரிய விஷயமாக இது உருவெடுக்கும் என்று அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். உண்மையிலேயே எல்லா டிக்டாக் வீடியோக்களையும் டெலிட் செய்துவிட்டு.. மனம் திருந்தி மன்னிப்பு கேட்டுள்ள ஸ்ரீனிகாவை மனசார பாராட்டவே செய்யலாம்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+