அஜித் குமார் பலியாகும்.. 10 நாட்களுக்கு முன் நிகிதா செய்த சம்பவம்.. தோண்ட தோண்ட பூதம் கிளம்புதே!
சென்னை: இளைஞர் அஜித் குமார் போலீசார் நடத்திய விசாரணையில் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிகிதா என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டார். இப்படி நிகிதா 10 நாட்களுக்கு முன் செய்த சம்பவம் ஒன்றை கவனம் பெற்றுள்ளது.

திருப்புவனம் காவல் மரண வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற காவல் மரண வழக்கு, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார் என்ற இளைஞர், விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 5 காவல்துறையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்து, காவல்துறை உயரதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இந்த வழக்கின் விசாரணை சரியாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. அப்போது, அஜித் குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக அரசின் இந்த அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அடுத்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கான தடையில்லா சான்றிதழை (NOC) தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து நேற்று இரவே இந்த வழக்கு சிபிஐக்கு உடனடியாக மாற்றப்பட்டது. இதையடுத்தே தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை உடனடியாக கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். போலீசார் தனிப்படை என்ற பெயரில் கூடுதல் அதிகாரங்களை எடுத்துக்கொள்வதை, கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நிகிதா மீது புகார்
தற்போது தாய் சிவகாமியுடன் வசித்து வரும் நிகிதா, தாய்க்கு ஸ்கேன் எடுப்பதற்காக மதுராபுரம் கோவிலுக்கு சென்றபோதுதான் நகை திருட்டு புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே அஜித்குமார் மரணம் நிகழ்ந்துள்ளது. மதுராபுரம் கோவிலில் தனது அம்மாவிற்கு சக்கர நாற்காலி (வீல் சேர்) வேண்டும் என்று நிகிதா கேட்டதற்கு, காவலாளி அஜித் குமார் ரூ.500 கேட்டுள்ளார். அதற்கு ரூ.100 தருவேன் என்று நிகிதா கூறிய நிலையில் அது வாக்குவாதம் ஆகி, இதனால் கோபம் அடைந்த நிகிதா நகை காணவில்லை என்று பொய் வழக்கு போட்டதாகக் கூறப்படுகிறது. ஐஏஎஸ் மூலம் போலீசாருக்கு பிரஷர் போட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா என்பவர் ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 16 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக 2011ஆம் ஆண்டு நிகிதா மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 நாட்களுக்கு முன் நடந்த சம்பவம்
நிகிதா, 2010ஆம் ஆண்டில் துணை முதல்வரின் உதவியாளரைத் தனக்குத் தெரியும் என்று கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, நிகிதாவின் குடும்பத்தினர் அவர்களை மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், "கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கூட, நிகிதா குடும்பத்தினரிடம் மோசடி செய்த எங்களது பணத்தை திருப்பித் தர வேண்டும் என கேட்டோம். ஆனால் அப்போதும் எங்களை நிகிதா குடும்பம் மிரட்டியது. நிகிதாவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கும் நீதி வேண்டும்" என்று தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications