Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடமாட்டோம்.. என்ன நடக்குது பாருங்க! 3 விஷயங்கள் + இன்னும் 3 நாள்தான் இருக்கு! ஸ்டாலின் பிளான் என்ன?

எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வம் இருக்கை விவகாரம் காரணமாக அவையில் அமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் தொடங்க உள்ள நிலையில் 3 விதமான விஷயங்கள் சட்டசபையில் கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் நடக்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

பட்ஜெட்

பட்ஜெட்

இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு இடையில் 3 விதமான விஷயங்கள் சட்டசபையில் கவனம் பெறும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷயம் 1 - அதிமுக இந்த கூட்டத்தொடரில் சட்ட ஒழுங்கு பற்றி அமளி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியில் வாக்கிங் போன பெண் தாக்கப்பட்டது தொடங்கி பல்வேறு கொலைகள், ஏடிஎம் கொள்ளை உள்ளிட்ட விஷயங்கள் பற்றி அதிமுக பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ஆளும் திமுகவிற்கு பிரஷர் கொடுக்கும் விதமாக என்எல்சி விவகாரம், பால் தட்டுப்பாடு, ப்ளூ காய்ச்சல் கேஸ்கள் அதிகரிப்பு போன்ற விஷயங்கள் குறித்தும் அதிமுக பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக

திமுக

விஷயம் 1 - இன்னொரு பக்கம் பாஜக சார்பாக வடஇந்தியர்கள் விவகாரம் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வட இந்தியர் பாதுகாப்பு விவகாரம் தமிழ்நாட்டில் உச்சம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் கடந்த சில நாட்களாக பொய்யாக பல வீடியோக்கள் வேகமாக பரவின. இணையத்தில் இது தொடர்பாக பரவும் வீடியோக்கள் அனைத்தும் பொய்யானது ஆகும். பீகாரில் இந்த பொய்யான வீடியோக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈரோடு, நாமக்கல், கோவையில் வேலை பார்க்கும் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்திகள் பரவி வருகின்றன. இது தொடர்பாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் அமளி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

 அதிமுக பிளான்

அதிமுக பிளான்

விஷயம் 3 - எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வம் இருக்கை விவகாரம் காரணமாக அவையில் அமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.. அதிமுகவில் தற்போது தேர்தல் ஆணைய விதிப்படி ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வென்றுவிட்டாலும் தேர்தல் ஆணையம் இன்னும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது வரை ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர். இதனால் ஒருங்கிணைப்பாளரை இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியில் இருந்து நீக்க முடியாது. அதனால் சட்டப்படி ஓ பன்னீர்செல்வம் இப்போதும் எதிர்கட்சித் துணை தலைவர்தான்.

இடம்

இடம்

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வைக்கும் வாதத்தில், ஓ பன்னீர்செல்வத்திற்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை. ஆர்பி உதயகுமார்தான் எதிர்க்கட்சி துணை தலைவர் என்று வாதம் வைத்து உள்ளார்.
இதற்காக எடப்பாடி சார்பாக, ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக நியமித்து உள்ளது. அதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த கோரிக்கையை வைத்தது. ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

இரண்டு கூட்டத்தொடர்

இரண்டு கூட்டத்தொடர்

. இதையடுத்து தமிழ்நாடு சட்டசபையில் கடந்த இரண்டு கூட்டத்தொடரிலும், மாற்றப்படவில்லை. இரண்டு தரப்பும் வைத்த கோரிக்கையால் இன்னும் அப்பாவு இருக்கைகளை மாற்றவில்லை. இதை எதிர்த்து கடந்த முறை எடப்பாடி பழனிசாமி தரப்பு கருப்பு சட்டையில் வந்தது. எடப்பாடி உட்பட அவரது அணியினர் எல்லோரும் கருப்பு சட்டையில் அவைக்கு வந்து இருந்தனர். இந்த முறை சட்டசபையில் என்ன நடக்கும், எடப்பாடி என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்டாலின் மீட்டிங் - பிளான் என்ன?

ஸ்டாலின் மீட்டிங் - பிளான் என்ன?

இந்த சட்டசபை கூட்டத்தொடருக்கு என்று முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில திட்டங்களை வகுக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. வடஇந்திய விவகாரத்தில் பீகார் சட்டசபையில் பாஜக பொய்யான செய்திகளை பரப்பியதாக ஸ்டாலின் பேச வாய்ப்பு உள்ளது. பாஜகவை தாக்கும் வகையில் அவர் பேசுவார். குடும்ப தலைவிக்கு ரூ. 1000 கொடுப்பது பற்றி சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்துவார் என்று கூறப்படுகிறது. கடைசியாக என்எல்சி விவகாரம், பால் தட்டுப்பாடு விவகாரம் தொடர்பாகவும் ஸ்டாலின் விளக்கம் அளிப்பார். அது தொடர்பாக சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பாக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+