Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்ஜிஆரை பார்த்து இப்படித்தான் ஏமாந்து போனீங்க.. இப்போ விஜய்யிடமா? ஆதங்கப்பட்ட தமிழருவி மணியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்க்கு கூடும் கூட்டத்தை திரைப்படத்தை பார்த்துவிட்டு விசில் அடிக்கும் கூட்டம் என்று சொல்லி கடந்துபோய்விட முடியாது.. இப்படி நினைத்தால் எம்ஜிஆரை பார்த்து ஏமாந்து போனது போல் ஏமாந்து விடுவீர்கள் என்று காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய அரசியல் வாழ்க்கையில் குறுகலான இடத்தில் நெருக்கி அடித்துக்கொண்டு லட்சக்கணக்கான மக்கள் கூடுவதை பார்த்ததே இல்லை என்றும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார் விஜய். வரும் 2026 சட்டமன்ற தேர்தலே குறி என்று களமிறங்கிய விஜய், விழுப்புரம் மாநாடு, மதுரை மாநாடு என அடுத்தடுத்து இரு மாநாடுகளை நடத்தி முடித்தார். அடுத்ததாக கடந்த வாரம் விஜய் சனிக்கிழமை திருச்சி, அரியலூரில் மக்கள் சந்திப்பை நடத்தினார்.

just-like-mgr-once-misled-the-masses-vijay-s-hype-could-do-the-same-tamilaruvi-manian

கூட்டம் ஓட்டாக மாறாது

திருச்சி, அரியலூரில் பரப்புரை செய்தார். திருச்சி, அரியலூர் மக்கள் சந்திப்பு பயணத்தின் போதும் மக்கள், தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. திருச்சியே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வரும் 2026 தேர்தலில் திமுக மற்றும் டிவிகே இடையே தான் போட்டி என்று விஜய் கூறி வந்தார். மேலும் திமுக எதிர்ப்பு அரசியலை செய்து வருகிறார். செல்லும் இடமெல்லாம் விஜய்க்கு அதிகளவில் கூட்டம் கூடுகிறது.

இதனை திமுக மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினரும் விமர்சித்து வருகிறார்கள். விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என்றும் விமர்சனம் வைத்து வருகிறார்கள். ஆனால் விஜய்யோ 1967 மற்றும் 1977 சட்டசபை தேர்தலை சுட்டிக்காட்டி அப்போது நடந்தது போல் 2026 சட்டசபை தேர்தலிலும் தமிழகம் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திக்கும் என்று கூறி வருகிறார்.

இப்படி பார்த்ததே இல்லை

இந்த நிலையில் தான் விஜய்க்கு கூடும் கூட்டத்தை திரைப்படத்தை பார்த்துவிட்டு விசில் அடிக்கும் கூட்டம் என்று சொல்லி கடந்துபோய்விட முடியாது என்றும், இப்படித்தான் நீங்கள் எம்ஜிஆரை பார்த்து சொல்லி ஏமாந்து போனீர்கள் என்றும் காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். மேலும் அவர் என்னுடைய அரசியல் வாழ்க்கையில் குறுகலான இடத்தில் நெருக்கி அடித்துக்கொண்டு லட்சக்கணக்கான மக்கள் கூடுவதை பார்த்ததே இல்லை என்றும் கூறினார்.

மக்கள் கடலென திரண்டுள்ளனர்

அவர் கூறியதாவது:- விஜய்க்கு நான் ரசிகன் இல்லை.. விஜய்யின் ஆதரவாளர் கிடையாது.. ஆனால் ஜனநாயகத்தின் அடிப்படை தகர்ந்துவிடப்பட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.. எத்தனை வித தடைகள்.. அத்தனை தடைகளையும் மீறி மக்கள் கடல் அங்கே இருக்கிறது. மக்கள் கடலென திரண்டு இருக்கிறார்கள். திருச்சி அடுத்து அரியலூர் இரண்டு ஊரில் மக்கள் சந்திப்பு நடத்தினார்.

மொத்தம் 8 லட்சம் பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்றதாக சொல்கிறார்கள். 8 லட்சம் பேர் ஆண்களும், பெண்களும்.. வேறு எந்தவித கட்சியிலும் இந்த மாதிரி இளைஞர்கள் கூட்டத்தை பார்க்க முடியாது. வெறும் இளைஞர்கள் மட்டுமில்லை. எல்லாம் திரைப்படத்தை பார்த்துவிட்டு விசில் அடிக்கும் கூட்டம் என்று சொல்லி கடந்துபோய்விட முடியாது..

எம்ஜிஆரை பார்த்து ஏமாந்து போனீர்கள்

இப்படித்தான் நீங்கள் எம்ஜிஆரை பார்த்து ஏமாந்து போனீர்கள்.. அதேபோன்று தான் இப்போது விஜய்யிடம்.. எந்த பாடத்தையும் நீங்கள் கற்கவில்லை. அவ்வளவு நெருக்கடியான இடத்திலும் கூட பெண்கள் கைக்குழந்தையோடு நிற்பதை பார்க்க முடிகிறது. என்னுடைய நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் இப்படி ஒரு குறிப்பிட்ட குறுகலான இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் நெருக்கி அடித்துக்கொண்டு ஒரு மனிதனை பார்க்க.. அவரது பேச்சை கேட்க நின்றதில்லை.

எம்ஜிஆருக்கு இருந்திருக்கலாம்.. இன்றைக்கு விஜய்க்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி.. மக்கள் இடையே ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கான சக்தி பெருக்கிக்கொண்டு இருக்கிறது என்பதை இதுவரை சரியாக கவனிக்காமல் இருந்தாலும் திருச்சியில் வந்த கூட்டத்தை பார்த்து கலங்கி போய்விட்டீர்கள்..

ஆட்சி நாற்காலி அசைகிறது

ஆட்சி நாற்காலி அசைவதை நீங்கள் உணர்ந்துவிட்டீர்கள்.. அதனால் இப்படி எல்லை மீறி செயல்களில் ஈடுபடுகிறீர்கள். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.. உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல.. தமிழகத்தில் ஒரு அரசியல் நடப்பதற்கும் நல்லதல்ல.. உங்களுக்கு பின்னால் இவ்வளவு பெரிய ஏதேச்சதிகார நடவடிக்கைகள் அரங்கேறுகின்ற நிலையிலும் விசிக தலைவர் தொ. திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்து வந்தால் இவர்கள் எப்படி மக்கள் நலன் பற்றி யோசிப்பார்கள்.. இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+