செந்தில் பாலாஜி மாதிரியே! மணிஷ் சிசோடியாவிற்கு நடந்தது என்ன? பின்னணியில் 6 ஒற்றுமை! சிக்கலில் திமுக
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை இன்று அதிரடியாக கைது செய்துள்ள நிலையில், ஏற்கனவே டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த 2 நடவடிக்கைக்கும் பின்னணியில் 6 ஒற்றுமைகள் உள்ள நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியை போல் திமுகவுக்கும் பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி உள்ளார். சமீபத்தில் இவரது சகோதரர் அசோக், உறவினர்கள் நண்பர்கள், நெருக்கமான ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.
இதையடுத்து நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் வீடுகளில் சோதனை நடத்தினர். மேலும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.

செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகத்தில் 17 மணிநேரம் சோதனை நடந்து முடிந்தது. இதையடுத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது நெஞ்சுவலி எனக்கூறி அவர் துடித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜியை சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கும், சிபிஐயால் கைது செய்யப்பட்ட டெல்லி ஆம்ஆத்மியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவுக்கும் இடையே 6 முக்கிய ஒற்றுமைகள் உள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் ஒற்றுமை: டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வராக மணிஷ் சிசோடியாவும் இருந்தனர். இவர்கள் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். 2024ம் ஆண்டு தேர்தலில் மத்தியில் பாஜக ஆட்சி அமைவதை தடுக்கும் வகையில் கூட்டணி முயற்சியை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தான் டெல்லி புதிய மதுபான ஊழல் வழக்கில் சிபிஐ மணிஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தது. அதேபோல் தான் தமிழக முதல்வராக இருக்கும் முதல்வர் ஸ்டாலினும் பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார். மேலும் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் சார்பில் நிறுத்த வேண்டும் எனவும் சில மாதங்களுக்கு முன்பே முழங்கினார். இதன்மூலம் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை ஸ்டாலின் வெளிப்படுத்தினார். இந்நிலையில் தான் தற்போது அவரது அமைச்சரவையில் உள்ள செந்தில் பாலாஜியை மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
2வது ஒற்றுமை: டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட மணிஷ் சிசோடியா என்பவர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வலதுகரமாக இருந்தார். ஆம்ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பக்கபலமாக இருந்து வந்தவர் தான் இந்த மணிஷ் சிசோடியா. தற்போது அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான அமைச்சராக வலம் வந்தவர் தான் செந்தில் பாலாஜி. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் திமுகவை வெற்றி பெற வைத்த பெருமை செந்தில் பாலாஜியையே சேரும் என்ற நிலையில் அவரும் இன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் டெல்லி, தமிழக முதல்வர்களின் வலதுகரமாக செயல்பட்ட மணிஷ் சிசோடியா மற்றும் செந்தில் பாலாஜியை மத்திய விசாரைண அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
3வது ஒற்றுமை: டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக மணிஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகத்தில் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தியது. டெல்லி தலைமை செயலகத்தில் உள்ள மணிஷ் சிசோடியாவின் அலுவலகத்திலும் இந்த சோதனை நடந்தது. அதேபோல் தான் தமிழ்நாட்டிலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக், உறவினர்கள், நண்பர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்தாரர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்த நிலையில் நேற்று அமலாக்கத்துறை களமிறங்கியது. அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் சென்னை, கரூரில் உள்ள வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தியது. இதன்மூலம் டெல்லி, தமிழ்நாட்டில் தலைமை செயலகத்தில் சோதனைகள் நடத்தப்பட்டு முதல்வருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4வது ஒற்றுமை: மணிஷ் சிசோடியா வழக்கை பொறுத்தமட்டில் சிபிஐ சோதனைகள் முடிந்த பிறகு சிறிது காலம் கழித்து விசாரணைக்கு ஆஜராக வேண்டி சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு மணிஷ் சிசோடியா ஆஜரான நிலையில் 8 மணிநேரம் கழித்து அவரை சிபிஐ கைது செய்தது. அதேபோல் செந்தில்பாலாஜியின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடந்தது. 17 மணிநேரம் வரை சோதனைகள் நடந்து முடிந்த நிலையில் விசாரணைக்காக அழைத்து சென்றபோது அவர் நெஞ்சுவலி எனக்கூறி கதறி துடித்தார். இதையடுத்து அவரை கைது செய்து அமலாக்கத்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதாவது விசாரணைக்காக அழைத்து தான் மணிஷ் சிசோடியாவை சிபிஐயும், அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியையும் கைது செய்துள்ளது.
5வது ஒற்றுமை: மத்திய பாஜக அரசை ஆம்ஆத்மி கடுமையாக விமர்சித்து வந்தது. இதற்கிடையே தான் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐயும், அதற்கு முன்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையும் கைது செய்திருந்தது. இவர்கள் 2 பேரையும் அமைச்சர் பொறுப்பில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் நீக்கவில்லை. துறைகளை மட்டும் மற்றவர்களிடம் மாற்றி கொடுத்ததோடு இருவரும் துறைகள் இன்றி அமைச்சர்களாக தொடர்ந்தனர். அதன்பிறகு இருவரும் தான் தாமாக முன்வந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோல் தான் தற்போதும் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இன்னும் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்படவில்லை. டெல்லி மாடலில் அவரது துறையை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு துறைகள் இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரலாம் என கூறப்படுகிறது. ஆனால் இன்று மாலையில் செந்தில் பாலாஜி வரும் 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலிலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் சார்பில் ஜாமீன் கோரப்படும். இதில் ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் செந்தில் பாலாஜியும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.
6வது ஒற்றுமை: ஆம்ஆத்மி டெல்லியை மையப்படுத்தி தான் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பஞ்சாப்பில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மேலும் குஜராத்திலும் 5 தொகுதிகளை ஆம்ஆத்மி கைப்பற்றியது. மாறாக இமாச்சல பிரதேச தேர்தலில் மட்டும் பின்னடைவை சந்தித்தது. கர்நாடகாவில் ஆம்ஆத்மி கட்சியின் கட்டமைப்பு நன்றாக இருக்கும் நிலையில் அங்கும் அக்கட்சி தீவிரமாக தேர்தல் பணியை தொடங்கியது. இதற்கிடையே தான் மணிஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கர்நாடகா தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் செயல்பாடு முடங்கியது. அதேபோல் தமிழ்நாட்டில் கொங்கு மண்டல பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். இது அதிமுகவின் கோட்டையாக இருக்கும் அதேவேளையில் கோவையில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. இருப்பினும் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை திமுக கைப்பற்றியது. அதேபோல் கொங்கு மண்டலத்தில் உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இதற்கு செந்தில் பாலாஜி முக்கிய காரணமாகும். இந்நிலையில் தான் தற்போது அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் பின்னடைவு ஏற்படுத்த வாய்ப்புள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications