நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாடிய காதலர் தினத்திற்கு எதிரான பாடல்.. கடைசியில் வைத்த பஞ்ச் தான் அருமை
சென்னை: "இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு.. ஆனந்த் ஆன எந்தன் பாட்டிருக்கு..." என்று ஆண் பாவம் படத்தில் வரும் 'காதல் கசக்குதய்யா' பாடலை அப்படியே முழுமையாக மேடையில் பாடி அசத்தி உள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். பொதுவாக ஒரு பாடலை ஒரு வரி அல்லது இரு வரிகள் தான் பிரபலங்கள் பாடுவார்கள். ஆனால் காதலர் தினத்திற்கு அப்படியே எதிர்ப்பான பாடலான காதல் கசக்குதய்யா பாடலை முழுமையாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாடியதை பலரும் பாராட்டுகிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் 'காதல்' என்ற பெயரில் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைப்பது மற்றும் அது தொடர்பான வழக்குகளில் பலமுறை முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக, போக்சோ மற்றும் ஆட்கொணர்வு மனுக்களை விசாரிக்கும் போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறிய அறிவுரைகள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

பருவ வயதில் ஏற்படும் உடல் ரீதியான ஈர்ப்பைக் காதல் என்று தவறாகப் புரிந்துகொண்டு, படிப்பையும் எதிர்காலத்தையும் இளைஞர்கள் சிதைத்துக் கொள்வதை ஒரு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் காதல் திருமணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள், தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் உணர்வுகளைச் சற்றும் மதிப்பதில்லை என்று பல வழக்குகளில் அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
18 முதல் 21 வயதுடைய இளைஞர்கள் எடுக்கும் அவசர முடிவுகள் பெரும்பாலும் தோல்வியில் முடிவதையும், பின்னாளில் அவர்கள் சட்டச் சிக்கல்களில் சிக்கித் தவிப்பதையும் அவர் பலமுறை கண்டித்திருக்கிறார்.
இளைஞர்கள் காதலிப்பதாகக் கூறி சிறுமிகளுடன் பழகி, பின்னாளில் போக்சோ சட்டத்தில் கைதாவது குறித்து அவர் வழங்கிய தீர்ப்புகள் மிக முக்கியமானவையாகும். "பரஸ்பரம் சம்மதத்துடன் நடைபெறும் உறவுகளையும், கொடூரமான பாலியல் வன்கொடுமைகளையும் சட்டம் ஒரே தராசில் பார்ப்பது சில நேரங்களில் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது" என அவர் குறிப்பிட்டிருந்தாலும், சட்டத்தை மீறுபவர்கள் அதன் விளைவுகளைச் சந்தித்தே தீர வேண்டும் என்பதில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உறுதியாக இருந்தார்.
ஒரு நீதிபதியாக அவர் வழங்கிய அறிவுரைகள்
இன்றைய இளைஞர்களுக்குப் பொறுமை மிகக் குறைவு. உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் ஒரு முடிவு, உங்கள் வாழ்நாள் முழுவதையும் சிறைக்குள் தள்ளிவிடும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய வயதில், தேவையற்ற உறவுகளில் சிக்கித் தவிப்பது தேசத்தின் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை கூறியிருக்கிறார்.
இதை எல்லாம் நீதிபதி சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில் இன்றைய இளைஞர்கள் பலர் காதல் என்ற பெயரில் வாழ்க்கையை தொலைப்பதை கண்கூடாக பார்த்துள்ளார். பல வழக்குகளை விசாரித்துளளார். சமூகத்தில் இளைஞர்கள் பொறுப்புடன் வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் வகையிலேயே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்புகள் மற்றும் அறிவுரைகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் காதலர் தினத்திற்கு எதிரான பாடலை அவர் மேடை ஒன்றில் பாடினார். "இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு.. ஆனந்த் ஆன எந்தன் பாட்டிருக்கு..." என்று ஆண் பாவம் படத்தில் வரும் காதல் கசக்குதய்யா பாடலை அப்படியே முழுமையாக மேடையில் பாடி அசத்தி உள்ளார்.
காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
லபோன்னுதான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்
காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா
Justice N. Anand Venkatesh of #MadrasHighCourt knows how to captivate the attention of Gen Z on Valentine's Day with a song composed and sung by Isai Gnani Ilaiyaraaja in 1985! Hear him sing the piece 👇 pic.twitter.com/LJLDZchPf3
— Mohamed Imranullah S (@imranhindu) February 15, 2026
-
யாராரோ காதலிச்சு... யாராரோ காதலிச்சு உருப்படல.. ஒண்ணும் சரிப்படல..
வாழ்கையிலே என்றும் சுகப்படல...
காதலை படம் எடுத்தா ஓடுமுங்க..
தியேட்டரிலே ஜனம் கூடுமுங்க..
தேவதாஸ் அவன் பார்வதி அம்பிகாபதி அமராவதி
கதைய கேளு முடிவ பாரு
கடைசியில் சேராம வாழம செத்தாங்க.. எனக்கிந்த
-
காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
லபோன்னுதான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்
காதல் கசக்குதயா
-
எத்தனை சினிமா எத்தனை டிராமா பாத்தாச்சு
எத்தனை டூயட் எத்தனை டியூன் கேட்டாச்சு
இத்தனை பாத்து இத்தனை கேட்டு என்னாச்சு
சக்தியும் கெட்டு புத்தியும் கெட்டு நின்னாச்சு
கிட்டப்பா அந்த காலத்துல காயாத கானகத்தே
பி.யூ. சின்னப்பா வந்த காலத்துல காதல் கனி ரசமே
மன்மத லீலை எம்.கே.டி. காலத்துல
நடையா.. இது நடையா.. நம்ம நடிகர் திலகம் பாணியிலே
ஹாலோ ஹாலோ சுகமா... அட ஆமாம் நீங்க நலமா..
எங்கேயும்தான் கேட்டோம்... அண்ணன் எம்.ஜி.ஆர். பாட்டுக்கள..
இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு
ஆனந்த் எந்தன் பாட்டிருக்கு
வீட்டுல அதை பாடுங்க பொண்டாட்டிய லவ் பண்ணுங்க
நம்ம தகப்பன் பேச்ச தாயின் பேச்ச மதிக்கணூம்
நீயாக பெண் தேட கூடாது எனக்கிந்த
-
காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
லபோன்னுதான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்
காதல் கசக்குதயா
மோதல் சாதல்
காதல்
காதல் கசக்குதயா
காதல் கசக்குதயா கசக்குதயா
என்று மொத்த பாடல் வரிகளையும் பாடியிருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இடையில் ஒரே ஒரு இடத்தில் தான்.. "இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு.. ஆனந்த் ஆன எந்தன் பாட்டிருக்கு..." கூறினார். அவர் பாடலை பாட பாட உற்சாகமாக பலர் கைதட்டி வரவேற்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications