ஆளுநர் 4 எம்எல்ஏ கட்சித் தலைவரா? 234 எம்எல்ஏக்களை கொண்ட அவையை அவமதிப்பவரா! தகித்த நீதியரசர் சந்துரு
சென்னை : நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஆளுநர் 4 எம்எல்ஏக்களுக்கு கட்சித் தலைவரா ? 234 உறுப்பினர்கள் கொண்ட அவையை அவமதிப்பவரா என நீதியரசர் சந்துரு கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் ஆளுநர் நீண்ட நாட்களாக ஒப்புதல் அளிக்காமலும் அந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

ஆளுநருக்கு கண்டனம்
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த 1ஆம் தேதியை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீண்டும் சட்டமன்றத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியானது. ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது. ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் எனவும், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போவதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமைப்புகளும் அறிக்கை வெளியிட்டு வருகின்றன.

கட்சிகள் போராட்டம்
இந்த நிலையில் ஆளுநருக்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற வலியுறுத்தி வேல்முருகன், திராவிடர் விடுதலைக்கழகம் ஆகியோர் போராட்டம் அறிவித்துள்ளதால் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

#getoutravi ஹேஸ்டேக்
தொடர்ந்து தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி #getoutravi என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுவரை டிவிட்டரில் மட்டும் ஒரு லட்சம் ட்விட்கள் பதிவிடப்பட்டுள்ளன. மேலும் முன்னணி அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், மாணவர்கள் ஆளுநருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீதியரசர் சந்துரு கண்டனம்
இந்தநிலையில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனங்களை நீதியரசர் சந்துரு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள நீதியரசர் சந்துரு "தா.நா. ஆளுநர் 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சித் தலைவரா? 234 எம்எல்ஏக்களை கொண்ட அவையை அவமதிப்பவரா!" எனப் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை பலரும் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications