Jwala Gutta: 30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்த விஷ்ணு விஷாலின் மனைவி! ஜுவாலாவுக்கு நல்ல மனசு!
சென்னை: பேட்மிண்டன் வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா 30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்துள்ளார். அதிலும் அரசு மருத்துவமனைக்கு சென்று தினமும் 600 மில்லி தாய்ப்பாலை வழங்கியுள்ளார்.
விஷ்ணு விஷால் ஒரு இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர். அவர் தமிழ் திரைப்படத்துறையில் முக்கியமாக பணியாற்றுகிறார்.

அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சில தகவல்கள்:
பெயர்: அவரது இயற்பெயர் விஷால் குடாவ்லா.
பிறப்பு: ஜூலை 17, 1984 அன்று வேலூரில் பிறந்தார்.
தந்தை: அவரது தந்தை ரமேஷ் குடாவ்லா, ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி.
முதல் திருமணம்: விஷ்ணு விஷால் தனது கல்லூரி தோழியான ரஜினி நடராஜை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு ஆர்யன் என்ற மகன் பிறந்தார். 2018 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். ரஜினியின் தந்தை நடராஜும் ஒரு நடிகர். நிறைய படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவியை ஏமாற்றி காட்டுக்குள் அழைத்துச் செல்லும் கேரக்டரில் நடித்திருந்தார்.
இரண்டாவது திருமணம்: 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று ஒரு பெண் குழந்தை பிறந்தது, அக்குழந்தைக்கு மீரா என பெயரிடப்பட்டுள்ளது. இவர்களது குழந்தைக்கு தாய்மாமனாக இருந்து பெயர் வைக்கும் விழாவில் நடிகர் அமீர்கான் கலந்து கொண்டார்.
திரைத்துறை வாழ்க்கை:
அறிமுகம்: 2009 ஆம் ஆண்டு வெளியான 'வெண்ணிலா கபடி குழு' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
முக்கிய திரைப்படங்கள்: 'வெண்ணிலா கபடி குழு', 'நீர்ப்பறவை', 'ராட்சசன்', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்', 'கதாநாயகன்' மற்றும் 'எஃப்.ஐ.ஆர்.' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.
ஜுவாலாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி
பிறப்பு: செப்டம்பர் 7, 1983 அன்று மகாராஷ்டிராவின் வார்தா நகரில் பிறந்தார்.
வம்சாவளி: அவரது தந்தை கிராந்தி குட்டா தெலுங்கர் மற்றும் தாயார் யெலன் குட்டா சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்.
வளர்ச்சி: அவர் ஆந்திரப் பிரதேசத்தின் ஹைதராபாத்தில் வளர்ந்தார்.
விளையாட்டு ஆர்வம்: ஆரம்பத்தில் டென்னிஸ் விளையாட விரும்பிய ஜுவாலா, தனது தாயாரின் வற்புறுத்தலால் பேட்மிண்டனுக்கு மாறினார்.

திருமணம்
2005 ஆம் ஆண்டு சக பேட்மிண்டன் வீரர் சேத்தன் ஆனந்தை மணந்தார். 2011 இல் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று நடிகர் விஷ்ணு விஷாலை திருமணம் செய்து கொண்டார்.
பேட்மிண்டன் சாதனைகள்
தேசிய சாதனைகள்: 2010 வரை 14 முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.
சர்வதேச சாதனைகள்
உலக சாம்பியன்ஷிப்: 2011 இல் லண்டனில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இது இந்தியாவின் முதல் உலக சாம்பியன்ஷிப் பதக்கமாகும்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்:
2010 இல் டெல்லியில் நடந்த போட்டிகளில் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
2014 இல் கிளாஸ்கோவில் நடந்த போட்டிகளில் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தாமஸ் & உபெர் கோப்பை: 2014 இல் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
ஒலிம்பிக் பங்கேற்பு: லண்டன் ஒலிம்பிக்கில், மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என இரண்டு பிரிவுகளிலும் தகுதி பெற்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீரர் ஆவார்.
உலக தரவரிசை: கலப்பு இரட்டையர் பிரிவில் உலக தரவரிசையில் 6வது இடத்தையும், மகளிர் இரட்டையர் பிரிவில் 10வது இடத்தையும் எட்டினார்.

பிற தகவல்கள்
2011 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் அர்ஜுனா விருது அவருக்கு வழங்கப்பட்டது.
விளையாட்டுக்கு அப்பால், பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவராகவும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவராகவும் அறியப்படுகிறார்.
இந்த நிலையில் ஜுவாலா தினமும் 600 மில்லி லிட்டர் தாய்ப்பாலை தினமும் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கியதன் மூலம் இதுவரை 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்துள்ளார். இந்த தாய்ப்பால், அந்த மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு (அதன் தாயின் பால் சுரக்காத நேரத்தில்), ஒரு வேளை தாயால் பால் கொடுக்க முடியாத சூழல், தாய் பிரசவத்தில் இறத்தல் போன்ற சூழல்களில் வழங்கப்படும். தற்போது தாய்ப்பாலை பெரும்பாலானோர் தானம் செய்கிறார். இவ்வாறு தானம் செய்வதால் பால் நன்றாக சுரக்கும். தனது குழந்தைக்கு போக மீதமுள்ள பாலை தானம் செய்ய பெண்கள் முன்வர வேண்டும்.
முதல் 6 மாத குழந்தைகளுக்கு தாய்ப்பாலை காட்டிலும் சுத்தமான, சத்தான உணவு வேறு எதுவும் இல்லை. இவ்வாறு ஒவ்வொரு மருத்துவமனையிலும் சேகரிக்கப்படும் தாய்ப்பாலானது பல்வேறு இடங்களில் தாய்ப்பால் இன்றி தவிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கூட உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications