டெல்லியில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்.. கைகட்டி வேடிக்கை பார்த்த ஜேஎன்யூ.. மார்க்சிஸ்ட் கண்டனம்
ஜேஎன்யூ பல்கலைக்கழக்தில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கே பாலகிருஷ்ணன் கண்டனம்
சென்னை: பல்கலைக்கழகத்திற்குள் படிப்பதற்கும் பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் நடக்கவும் விவாதிக்கவும் உரிமை உள்ளது. ஆனல் ஏபிவிபி அதனை முடக்க முயல்கிறது, பல்கலைக்கழகம் நிர்வாகம் அதை கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. நிர்வாகத்தை நடத்துவதே ஏபிவிபி பரிவாரம்தானா என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் கோழைத்தனமாக தமிழக மாணவர்களை தாக்கியதோடு தந்தை பெரியார், காரல் மார்க்ஸ், போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் ஏபிவிபி அமைப்பினர் அடித்து நொறுக்கியுள்ளதற்கும் முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உரிமை
மேலும் தங்கள் உரிமைகளுக்காக போராடுகிற மத்திய பாஜக அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பாதுகாப்பு பணியாளர்களும் டெல்லி காவல் துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு ஆதரவாக என் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக் கொள்வதுன், தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தமிழக மாணவர்களை பாதுகாக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஏ.பி.வி.பி அமைப்பினர் கொலைவெறித் தாக்குதலில் தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர் நாசர் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை பெரியார் படம் உள்ளிட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மாணவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிய பிறகும் கூட மீண்டும் தாக்க முயன்றுள்ளார்கள் ஏ.பி.வி.பி அமைப்பினர்.

பல்கலைக்கழகத்திற்குள்
பல்கலை கழகத்திற்குள் படிப்பதற்கும், பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் நடக்கவும் விவாதிக்கவும் உரிமை உள்ளது. ஆனால் ஏ.பி.வி.பி அதனை முடக்க முயல்கிறது. பல்கலை கழக நிர்வாகம் அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. நிர்வாகத்தை நடத்துவதே ஏ.பி.வி.பி பரிவாரம்தானா? என்ற கேள்விதான் எழுகிறது. இதற்கு முன்பும் கூட ஏ.பி.வி.பி அமைப்பினர், வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து மாணவர் தலைவர்கள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வன்முறை
இப்போது அந்த வன்முறையை தமிழ்நாட்டு மாணவரை நோக்கி நடத்தியுள்ளனர். பல்கலை கழக நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு குற்றமிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜே.என்.யூ பல்கலை கழகம் அனைவருக்குமான இடமாக ஜனநாயகத்துடன் இயங்குவதை உறுதி செய்திட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்திற்கு வைகோ, ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

ராமதாஸ் கண்டனம்
பாமக நிறுவனர் ராமதாஸ்: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பேரணியின் போது தமிழகத்தைச் சேர்ந்தோர் உள்ளிட்ட மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவை கண்டிக்கத்தக்கவை! பல்கலைக்கழக வளாகங்களில் நீதி கேட்டு போராடும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது; அதை தடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

வைகோ கண்டனம்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: நாட்டின் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனமான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்களை கல்வித் துறையில் மட்டுமின்றி, அரசியல் பொருளாதாரத் துறையிலும் ஒளிரச் செய்து வருகிறது. இங்கு இந்திய நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் நிலைப் பெற பல்வேறு சித்தாந்தங்கள் பற்றிய கருத்தியல் விவாதங்கள் நடப்பதும், சமூகநீதி,பெண்ணுரிமை, சமத்துவம், மதச் சார்பின்மை மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட கோட்பாடுகள் பற்றி மாணவர்களிடையே கருத்தரங்கம், பயிலரங்கம் நடப்பதும் பல ஆண்டுகளாக தொடர்கின்றன.

இந்துத்துவ மத வெறி
2014 இல் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்த பின்னர் ஜேஎன்யூ இந்துத்துவ மத வெறிக் கும்பலின் கொடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி மற்றும் இந்துந்துவ அமைப்பினர் ஜேஎன்யூவில் அத்து மீறி நுழைந்து, முற்போக்கு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யும் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், குறிப்பாக இஸ்லாமிய, தலித் மாணவர்களை இலக்காக வைத்து வன்முறையை ஏவுவதும் தொடர் நிகழ்வுகள் ஆகி விட்டன. இதற்கு ஜேஎன்யூ நிர்வாகமும் துணை போகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
நேற்று (பிப்.19 ) ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30 க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள், "ரிசர்வேசன் கிளப்'' என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். கூட்டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏபிவிபி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தடுக்கச் சென்ற மாணவர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயம் அடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தலைவர்களை இழிவுப்படுத்திய கொடுமை
அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பொது உடைமைத் தலைவர்களை இழிவு படுத்தி வரும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பலின் இத்தகைய செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழக மாணவர்கள் மீது கொடூர வன்முறையை ஏவி, தந்தை பெரியார் திருவுருவப்படத்தையும் சேதப்படுத்திய ஏ.பி.வி.பி. கும்பலை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். காயம் அடைந்த மாணவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications