பாஜகவுக்கு ரூ 100 கோடி தேர்தல் நன்கொடை.. லாட்டரி மார்ட்டின் வழங்கியதாக புகார்.. கே எஸ் அழகிரி அறிக்கை
சென்னை: பாஜகவுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் ரூ 100 கோடி நன்கொடை அளித்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையில், புரூடன்ட் என்ற தேர்தல் நிதிஅறக்கட்டளை, கட்சிகள் பெற்ற நிதி விவரங்களை கடந்த 20-ம்தேதி தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
கடந்த 2020-21 நிதியாண்டில் தனி நபர்கள், நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் மொத்தம் ரூ. 245 கோடி நன்கொடையாக பெற்றுள்ளன. இந்த தொகையில், பாஜகவுக்கு மட்டும் 83 சதவீதம் நன்கொடையாக வழங்கப்பட்டிருப்பது, அந்த நிதி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

வருமான வரி சோதனை
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரி சோதனை நடத்தப்பட்ட நிலையில், மார்ட்டினின் பியூச்சர் கேமிங் அண்ட் ஓட்டல்சர்வீஸ் நிறுவனம் மூலம் பாஜகவுக்கு மார்ட்டின் ரூ.100 கோடி நன்கொடை அளித்திருப்பது புரூடன்ட் தேர்தல் நிதி அறக்கட்டளை மூலம் அம்பலமாகியுள்ளது.

நாடு முழுவதும்
அவருக்கு எத்தகைய கைமாறு செய்ய மோடி அரசு உறுதி அளித்திருக்கிறது, அவருக்கு எதிராக நாடு முழுவதும் நிலுவையில் உள்ளவழக்குகள் என்னவாகும் எனகேள்விகள் எழுகின்றன. இதேபோன்று, குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய எத்தனை மார்ட்டின்கள் தேர்தல் நன்கொடை பட்டியலில் இருக்கிறார்கள் என்பதுஇனிவரும் காலங்களில் தெரியவரும்.

லாட்டரி அதிபர்
சர்ச்சைக்குரிய லாட்டரி அதிபர்ஒருவர் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததன் பின்னணி குறித்தும், அவருக்கும் பாஜகவுக்கும் இடையேயான உறவு குறித்தும் நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

100 கோடி ரூபாய்
பா.ஜ.வுக்கு தேர்தல் நிதியாக, 100 கோடி ரூபாயை, கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் வழங்கி உள்ளார். தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு, பெரு நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி பெற்று வழங்க, டில்லியைச் சேர்ந்த, 'புரூடெண்ட் எலக்ட்டோரல்' அறக்கட்டளைக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் அங்கீகாரம் அளித்துள்ளதாம்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications