தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் சண்முகம்.. டிஜிபியாக திரிபாதி நியமனம்!
Recommended Video
சென்னை: தமிழகத்தின், புதிய தலைமைச் செயலாளராக, கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளையுடன் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரின் பதவி காலம் நிறைவடைகிறது. இதையடுத்து, புதியதாக நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் 46வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை தொடர்ச்சியாக நிதித்துறை செயலாளராக அவர் இருந்து வருகிறார். முன்னதாக, கூட்டுறவு துறை முதன்மை செயலாளராகவும், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் பதவி வகித்த அனுபவம் உள்ளவர்.
சேலம்தான் சண்முகத்தின் பூர்வீகம். வேளாண் படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற இவர், 1985 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாகும்.
ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சி, அம்மா கேண்டீன் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கி, நிதி சுமையை சிறப்பாக கையாண்டவர் என்ற பாராட்டு பெற்றவர் இவர். திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலங்களில் ஒரே துறையில் ஒரே பதவியில் பொறுப்பு வகித்தவர் சண்முகம் ஐஏஎஸ் மட்டுமே.
இதேபோல, சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக இருக்கும், திரிபாதி, புதிய, சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் டெல்லி எம்பில் படிப்பு முடித்தவர். 1985ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி இவர்.
தமிழகத்தில் இதுவரை 9 மாவட்டங்களில் எஸ்பியாக பதவி வகித்த அனுபவம் உள்ளவர். சென்னை காவல்துறை கமிஷனராக பதவி வகித்துள்ளார். வங்கி கொள்ளையர்கள் 5 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டபோது, இவர் சென்னை கமிஷனராக இருந்தார். ரவுடி வீரமணி என்கவுண்டரிலும் அவர் முக்கிய பங்கு வகித்ததாக சொல்லப்படுவதுண்டு. சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும் திரிபாதி பதவி வகித்திருந்தார். இப்போது காவல்துறையின் உச்சபட்ச பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications