கி. வீரமணி அசரலையே.. இன்று முதல் பரப்புரை பயணம்.. அதிர்ந்து பார்க்கும் பாஜக..வாபஸாகுமா "விஸ்வகர்மா"?
சென்னை: பாஜக அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து, இன்று 25-ந் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரை, பரப்புரை பயணத்தை மேற்கொள்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.
திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம், 2 நாளைக்கு முன்பு, திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.. அப்போது கூட்டத்தில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கி.வீரமணி: குறிப்பாக, பாஜக அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து 25-ந் தேதி முதல் நவம்பர் 3-ந் தேதி வரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மேற்கொள்ளும் பரப்புரையை அனைத்து கட்சி தலைவர்கள், கட்சி சாராத அமைப்புகள், சமுதாய பெருமக்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்துவது என்ற முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு பிறகு, கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜாதிவாரி கணக்கெடுப்புகளை முறையாக நடத்த வேண்டும். மத்திய பாஜக அரசு, 'விஸ்வகா்மா' திட்டத்தை அறிவித்து இளைஞா்களை மீண்டும் அவா்களது குலத்தொழிலை செய்ய தூண்டுவது கண்டிக்கத்தக்கது.
பிரச்சாரம்: இந்தத்திட்டத்தை கண்டித்து, 25ம் தேதி முதல் நவம்பர் 3 வரை தமிழகத்தில் பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளோம். இதுதொடா்பாக நாள்தோறும் 2 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
அதன்படி, இன்றுமுதல் இந்த பிரச்சார பயணத்தை துவங்க உள்ளார்.. விஸ்வகர்மா யோஜானா திட்டம் குறித்து பலமுறை கி.வீரமணி விமர்சித்துள்ளார்.. காட்டமான கருத்துக்களையும் பலமுறை முன்வைத்திருக்கிறார்.
குலத்தொழில்: குறிப்பாக, "விஸ்வகர்மா யோஜானா திட்டத்தால் 18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்கு செல்ல விடாமல், பரம்பரை சாதி தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். சென்னை மாநில முதலமைச்சராக இருந்த ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்ததால்தான் ஆட்சியை இழந்தார். இதைப்போல் விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் பாஜக அரசும், விரைவில் ஆட்சியை இழக்கும் என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமல்ல, ஆர்எஸ்எஸ் கொள்கையாக இருக்கக்கூடிய வர்ணாசிரம தர்மத்தை நோக்கி அனைவரும் வர வேண்டும் என்ற நோக்கில், குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர, மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார் மூத்த தலைவர் கி.வீரமணி.. இப்படிப்பட்ட சூழலில் இன்றுமுதல் பிரச்சார பயணத்தை துவக்கியிருப்பது, தமிழக அரசியலின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications