"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு".. ரஜினி ஃபேன்ஸ் குஷி!
சென்னை: 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக இடி போல் முழங்கிய ரஜினிகாந்த், 2021 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கினால் அவர் கபாலி படத்தில் வரும் பஞ்ச் வசனத்தை தாராளமாக சொல்லலாம். இந்த வசனம் தற்போது ட்விட்டரில் டிரென்டாகி வருகிறது.
ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக நேற்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அடுத்தபடியாக போயஸ் தோட்டத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் நிகழ்த்திய அவர் தனது பேட்டியில் அனல் பறக்கும் விஷயங்களை கூறினார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அளவுக் கடந்த மகிழ்ச்சியால் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். மேலும் கபாலி படத்தில் அவர் கூறிய ஒரு டயலாக் வைரலாகி வருகிறது.

தமிழகம்
1996-ஆம் ஆண்டு ரஜினியின் அரசியல் பேச்சை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போதைய சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என ரஜினிகாந்த் பேசியிருந்தார். இவர் கொடுத்த வாய்ஸால் அந்த ஆண்டு திமுக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது.

இந்தியா
இது தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. ஒரு வேளை ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரா என பார்க்கப்பட்டது. அவரே ஆட்சி அமைக்கும் அளவுக்கு அப்போது வாய்ப்புகள் இருந்தும் கூட ரஜினி அதை விரும்பவில்லை. ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினியின் இந்த எதிர்ப்பு அலை நடந்து 25 ஆண்டுகள் ஆயிற்று.

வந்துட்டேன்
கடந்த 2016-ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் கபாலி படம் வெளியானது. இதில் டானாக நடித்திருந்த ரஜினிகாந்த் மற்ற வில்லன்களிடம் ஒரு பஞ்ச் பேசுவார். " நான் வந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு , 25 வருஷத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என பேசியிருப்பார்.

அரசியல்வாதிகள்
1996-ஆம் ஆண்டு தமிழக அரசியலில் அனல் பறக்க பேசிய ரஜினிகாந்த், தற்போது 2021-ஆம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்குகிறார். அதாவது 1996-ஆம் ஆண்டு சம்பவத்திற்கு 25 ஆண்டுகள் கழித்து.. அப்போது தமிழக அரசியல்வாதிகளிடம் என்ன பஞ்ச் சொல்லுவார் தெரியுமா, நான் திரும்பி வந்துட்டேன், 25 வருஷத்திற்கு முன்னாடி எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்" என பேசுவார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications