சந்திரயான் விஞ்ஞான உலகம் வியக்கின்ற மாபெரும் வெற்றி.. பிரதமர் மோடிக்கு காதர்மொகிதீன் பாராட்டு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி அளித்து வரும் ஆதரவு வரவேற்கத்தக்கது பாராட்டுக்குரியது என்றும் சந்திரயான் இலக்கை எட்ட முடியாதது தோல்வி அல்ல; விஞ்ஞான உலகம் வியக்கின்ற மாபெரும் வெற்றி என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
சந்திரயான் நிலவை நோக்கிய பயணம் அறிவியல் துறையில் இந்தியா நடத்திய அற்புதங்களில் ஒன்றாகும்.

உலக நாடுகள் முன்வரவில்லை
இதுவரை நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்யும் முயற்சியை உலகில் விஞ்ஞான வளர்ச்சி பெற்ற அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற எந்த நாடுகளும் முன்வரவும் இல்லை. முயற்சி எடுக்கவும் இல்லை. நிலவின் இருண்ட பகுதி என அவர்கள் ஒதுக்கி இருக்கலாம்.

சிவன் அண்ணாதுரை
ஆனால், இந்திய விஞ்ஞானிகள் குறிப்பாக தமிழகத்தில் உருவாகி தரணியெங்கும் விஞ்ஞான உலகில் அற்புதத்தை நிகழ்த்தி வரும் விஞ்ஞானிகள் அண்ணாதுரையும், சிவனும் அவர்களின் குழுவினரும் நிலவின் இருண்ட பகுதியில் மறைந்து கிடக்கின்ற அதிசயங்களை உலகறிய செய்யும் நோக்கில் சந்திரயானை உருவாக்கி இருக்கிறார்கள்.

இது தோல்வி அல்ல
99. 9 சதவீதம் வெற்றியை எட்டிய கடைசி நிமிடத்தில் தங்களது இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தோல்வி அல்ல. விஞ்ஞான உலகம் வியக்கின்ற மாபெரும் வெற்றியாகும். இந்திய விஞ்ஞானிகள் உலக விஞ்ஞானிகளின் பாராட்டையும் வாழ்த்தையும் பெற்றிருக்கிறார்கள்.

மத்திய அரசின் கடமை
மத்திய அரசு குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய விஞ்ஞானிகளின் அதிசயத்தக்க ஆய்வுகளுக்கு தொடர்ந்து ஆதரவும், உற்சாகமும் அளித்து வருவது வரவேற்று பாராட்டுக்குரியதாகும். ஒரு மயிரிழையில் தப்பியிருக்கிற முழு வெற்றியை இந்திய விஞ்ஞானிகள் பெற்று உலகத்தின் பாராட்டை பெறுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி ஊக்கமளித்து உதவிகளை ஊக்குவித்து வருவது மத்திய அரசின் கடமையாகும் என்பது மக்களுடைய எதிர்ப்பார்ப்பாகும்.இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
-
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications