காதர் மொய்தீன் சடன் முடிவு! திமுகவுடன் மீண்டும் பெவிகால் ஒட்டு!விஜய் கணக்கை கலைத்த அந்த வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் கிளைமாக்ஸ் நெருங்கும் வேளையில், காதர் மொகிதீன் போட்ட அதிரடி 'யூ-டர்ன்' விஜய்யின் கணக்குகளை அப்படியே மாற்றிப்போட்டுள்ளது.. தவெகவுக்கு ஆதரவு என்ற தகவலைத் தவிடுபொடியாக்கி, திமுக கூட்டணியில் பாறை போல உறுதியாக நிற்பதாக அவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.. எனினும் இதை வைத்துக்கொண்டு சிலர் சந்தேகங்களை கிளப்பிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய அரசு அமைவதில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு திருப்பம் அரங்கேறி வருகிறது.

DMK Vijay TVK Kadhar Moideen Tamil Nadu Politics Stalin

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

குறிப்பாக 108 இடங்களைப் பிடித்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு பெருகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எடுத்துள்ள அதிரடி முடிவு அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

நேற்று மாலை தவெக-விற்கு முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்கப் போவதாகத் தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

திமுக பெவிகால் ஒட்டு

அந்த அறிக்கையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தான் இன்றும் நீடிப்பதாக அவர் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக பாபநாசம் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் வெற்றி பெற்ற தங்கள் கட்சியின் 2 எம்எல்ஏ-க்களும், தமிழகத்தில் ஜனநாயக முறையிலான ஆட்சி அமைய திமுக தலைவர் ஸ்டாலின் எடுக்கும் முயற்சிகளுக்குத் துணையாக இருப்பார்கள் என்றும் தெளிவாகவே தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் தவெக ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதத்தை அவர்கள் வழங்கப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.. ஆனால், இதைப் பிடித்துக் கொண்டுதான் ஒருசில பிரபலமான ஊடகங்கள் "முஸ்லிம் லீகின் நிலைப்பாடு என்ன?" என்று நேரடியாகக் கேள்வியை தற்போது எழுப்பி வருகின்றன..

விஜய் கனவு கலைந்தது

உண்மையில், தவெக நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக காதர் மொகிதீனை இரண்டு முறை சந்தித்துப் பேசியும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

நேற்று 3-வது முறையாகத் தவெக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு கோரிய போதும், "நாங்கள் திமுக கூட்டணியில் நேற்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம், நாளையும் இருப்போம்" என்று காதர் மொகிதீன் கறாராகத் தெரிவித்துவிட்டாராம்.. தவெக குறித்து தனது அறிக்கையில் ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடாத அவர், ஆளுநருக்கு ஆதரவு கடிதம் கொடுக்காததன் மர்மமும் இப்போது விலகியுள்ளது..

காதர் மீரான் போட்ட யூ-டர்ன்

பல வருடங்களாகவே திமுகவின் நட்பு சக்தியாக விளங்கி வரும் முஸ்லிம் லீக், தற்போதைய நெருக்கடியான சூழலிலும் அசைக்க முடியாத விசுவாசத்தை காட்டியிருப்பது திமுக முகாமிற்குப் பெரிய தார்மீக பலத்தைத் தந்துள்ளது.. ஏற்கனவே சிபிஎம், சிபிஐ கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், முஸ்லிம் லீக் மட்டும் திமுக பக்கம் உறுதியாக நிற்பது விஜய்யின் ஆட்சி அமைக்கும் கனவிற்கு சற்று முட்டுக்கட்டையாகவே பார்க்கப்படுகிறது..

பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான இடங்களை எட்டுவதற்கு தவெக படாதபாடு பட்டு வரும் இந்த நேரத்தில், முஸ்லிம் லீகின் இந்த "யு-டர்ன்" அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

ஒருபுறம் விஜய் தரப்பு மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தங்களின் பழைய கூட்டணிக் கொள்கையில் உறுதியாக நிற்கும் முஸ்லிம் லீகின் இந்த முடிவு, அடுத்தடுத்த நாட்களில் தமிழக அரசியலில் இன்னும் பல மாற்றங்களை உண்டாக்கலும். என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+