ஜெயங்கொண்டம் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளராக காடுவெட்டி குரு மனைவி சொர்ணலதா போட்டி
சென்னை: பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் (குருநாதன்) மனைவி சொர்ணலதா போட்டியிடுவார் என அறிவிக்கபட்டுள்ளது.
பாமகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் வன்னியர் சங்க தலைவராகவும் திகழ்ந்தவர் காடுவெட்டி குரு. 2018-ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் காடுவெட்டி குரு காலமானார்.

காடுவெட்டி குரு குடும்பம்
இதன் பின்னர் பாமகவுக்கும் காடுவெட்டி குருவின் குடும்பத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை, பண்ருட்டி தி. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார்.

திமுக ஆதரவு- மஞ்சள் படை
காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை உருவாக்கினார். அண்மையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து சட்டசபை தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக கனலரசன் தெரிவித்தார்.

காடுவெட்டி குரு மனைவி போட்டி
இந்த நிலையில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா போட்டியிடுகிறார். அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் சொர்ணலதா பெயர் இடம் பெற்றுள்ளது.

சுயேட்சையாக போட்டியிட திட்டம்
முன்னதாக ஜெயங்கொண்டம் தொகுதியில் சொர்ணலதா, ஏற்கனவே சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்தார். இதையடுத்து இந்திய ஜனநாயகக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று சொர்ணலதா அக்கட்சியின் வேட்பாளராக களமிறங்குகிறார்.

ஜெயங்கொண்டம் பாமக
ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வேட்பாளர் பாலு போட்டியிடுகிறார். பாலுவுக்கு சீட் கொடுத்த அதிருப்தியில் வன்னியர் சங்க தலைவரான வைத்தி பாமகவை விட்டு விலகினார். இப்போது காடுவெட்டி குருவின் மனைவி பாமக வேட்பாளரை எதிர்த்து களம் காண்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications