கருப்பாக இருக்கிறேனு முன் வரிசையில் நின்னு டான்ஸ் ஆட விடமாட்டாங்க.. கலா மாஸ்டரின் சக்சஸ் ஸ்டோரி
சென்னை: கருப்பாக இருக்கிறேன் என்பதால் என்னை முன் வரிசையில் நிற்க வைக்க மாட்டார்கள் என நடன இயக்குநர் கலா தெரிவித்துள்ளார்.
நடன இயக்குநர் கலா மாஸ்டர்... ரஜினி, கமல் முதல் பாலிவுட், டோலிவுட், மல்லுவுட் என அனைவரையும் "ஆட்டுவித்தவர்". இவரும் இவரது சகோதரி பிருந்தா மாஸ்டரும் தங்களது நடன திறமையால் நடன இயக்குநர்களாக மிகப் பெரிய இடத்தை திரைத்துறையில் பெற்றுள்ளார்கள்.
1984 ஆம் ஆண்டு முதல் கலா மாஸ்டர் சினிமா துறையில் இருந்து வருகிறார். பல நல்ல நடன கலைஞர்களை வளர்த்துவிட்டார். சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் இவருடைய சிஷ்ய பிள்ளைகள்தான்.

கிரிஜா
இவருடைய அக்கா கிரிஜாவும் நடன கலைஞர்தான். கிரிஷாவின் கணவர் ரகுராம் நடன இயக்குநராக இருந்தார். இவர் மூலம் தான் கலாவும் பிருந்தாவும் சினிமாவுக்குள் நுழைந்தனர். முதலில் நடன குழுக்களில் கலா நடனம் ஆடினார். ரகு மாஸ்டர் ஊரில் இல்லாத போது கமல்ஹாசன் படத்திற்கு நடன இயக்குநர் தேவை என்பதால் கலா மாஸ்டரை அணுகினர். அந்த வகையில் கொரியோகிராபராக கலா அறியப்பட்ட படம் புன்னகை மன்னன்.

கமல்ஹாசனின் படம்
கமல்ஹாசன் எவ்வளவு பெரிய டான்ஸர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய படத்திற்கு கலா மாஸ்டர் கொரியோகிராப் செய்தார். அது போல் ரஜினியின் சந்திரமுகி படத்திற்கு தமிழக அரசின் சிறந்த நடன இயக்குநருக்கான விருதை பெற்றார். இந்த படத்தில் ராரா பாடலுக்கு இவர் அமைத்த நடன அசைவுகள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

நடுவர்
இவர் ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருந்துள்ளார். இவரது முதல் ஷோ மானாட மயிலாட!. இந்த நிகழ்ச்சியில் பல கலைஞர்களை ஊக்குவித்துள்ளார். இவர் பரதநாட்டியம், பாங்கரா மற்றும் மேற்கத்திய நடன அசைவுகளை இணைந்து தனித்துவமான நடனத்தை இயக்கியுள்ளார். அது போல் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிக்கும் இவர் நடுவராக வந்துள்ளார்.

யூடியூப் சேனலுக்கு பேட்டி
இவர் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதன் மூலம் அவர் எத்தனை கடின உழைப்பால் முன்னுக்கு வந்துள்ளார் என்பது தெரியும். இதுகுறித்து கலா மாஸ்டர் கூறியிருப்பதாவது: அசிஸ்டென்ட்டாக இருக்கும் போது எனக்கு ரொம்ப பயம். ரகு மாஸ்டருக்கு சட்டுசட்டுனு கோபம் வரும். தப்பு செய்தால் கத்திவிடுவார். ஒரு நடன அசைவை அவர் சொல்லிக் கொடுத்தால் அதனை உடனே பிடித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திட்டுதான்.

மச்சினிச்சி
முதலில் 20 பேர் 30 பேர் என நடன குழுவில் ஆடிக் கொண்டிருந்தேன். அப்போது என்னை பார்க்கும் இயக்குநர்கள், ரகு உங்கள் மச்சினிச்சியாக இருந்தாலும் அந்த பெண் கருப்பாக இருக்கிறார், முன்னாடி நிற்க வைக்காதீர்கள் என சொல்வார்கள். இதனால் எனக்குள் ஒரு வைராக்கியம் இருந்தது. கருப்பாக இருக்கிறேன் என எந்த இயக்குநர் சொன்னாரோ அந்த இயக்குநர் பாராட்டும்படி ஆட வேண்டும் என்பதுதான்.

வைராக்கியம் மிக்க கலா
ஒரு ஆண்டு கழித்து மலையாள படத்தில் நான் பின்னால் இருந்து ஆடிக் கொண்டிருந்த போது அதே இயக்குநர் பார்த்துவிட்டு ரகு அந்த பெண்ணை முன்னாடி நிற்க வை என்றார். அதற்கு ரகு மாஸ்டர், நீங்கள்தானே அந்த பெண் கருப்பாக இருக்கிறார், பின்னாடி நிற்க வைங்கன்னு சொன்னீங்க என்றார். அதற்கு அந்த இயக்குநர் இல்லை இல்லை அந்த பெண் நன்றாக ஆடுகிறார், முன்னாடி நிற்க வைங்க என்றார். இப்படியாக தன் பணியில் முன்னுக்கு வந்தது குறித்து கலா மாஸ்டர் கூறினார். எந்த துறையாக இருந்தாலும் பெண்கள் முன்னேறுவது என்பது அத்தனை எளிதல்ல. என்னதான் திறமை இருந்தாலும் சில இடங்களில் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது, தடங்கல்கள் ஏற்படுகின்றன. இவை எல்லாவற்றையும் கடந்தே கலா , பிருந்தா ஆகியோர் சாதனை படைத்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications