Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை கலைஞர் நூலகம் போறீங்களா.. இதெற்கெல்லாம் அனுமதி இல்லை! நோட் பண்ணிக்கோங்க.. கட்டுப்பாடுகள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15 ஆம் தேதி திறந்து வைத்தார். மதுரை - நத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் அமைந்துள்ள நூலகத்திற்கு வரும் வாசகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மதுரையில் கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அரசாணை பள்ளிக்கல்வித்துறை மூலம் கடந்த ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் 4 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன.

 Kalaignar Centenary Library Administration Bans to Readers using cell phone

இந்த நூலகத்தை காமராஜர் பிறந்த நாளன்று முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். நவீனக் கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் டிஜிட்டல் நூலகமாக இந்த நூலகம் செயல்படத் தொடங்கியிருக்கிறது. 6 தளங்களுடன் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமாக இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்கள், குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளுக்கான நூலகப் பிரிவும் உள்ளது.

இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவும் உள்ளது. மூன்றாம் தளத்தில் 2,810 சதுர அடி பரப்பில் ஆங்கில நூல்கள் பிரிவும், ஆராய்ச்சிக்கட்டுரைகளும் உள்ளது. நான்காம் தளத்தில் 1,990 சதுர அடி பரப்பில் அமரும் வசதியுடன் கூடிய ஆங்கில நூல் பிரிவு உள்ளது. அதோடு, போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் உள்ளன. 5-வது தளத்தில் 1,990 சதுர அடியில் மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல் பிரிவும் உள்ளது.

6-வது தளத்தில் 1,990 சதுர அடியில் கூட்ட அரங்கு, நூலகத்துக்கான ஸ்டூடியோ, மின்னணு உருவாக்கப் பிரிவு, நுண்படச்சுருள், நுண்பட நூலக நிர்வாகப் பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு எனப் பல பிரிவுகள், நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. இந்த நூலகத்திற்கு வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகம் பேர் வருவதை காண முடிகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் என பல தரப்பினரும் ஆர்வமாக நூலகத்தை பார்வையிட்டு வருகின்றனர். இதனால், மதுரையில் புகழ்பெற்ற சுற்றுலா தளத்திற்கு நிகராக கலைஞர் நூற்றாண்டு நூலகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த நூலகத்தில் உள்ளன. இதற்கிடையே, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நூலகத்தில் புகைப்படம், வீடியோ எடுக்கவும் அனுமதி இல்லை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் தடைக்கான அறிவிப்புகள் நூலகத்தில் ஆங்காங்கே நோட்டீஸ்களாக ஒட்டப்பட்டுள்ளன. தின்பண்டங்கள், குளிர்பானம், தண்ணீர் பாட்டில்களுக்கும் அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நூலகத்தின் குழந்தைகள் பிரிவில் 14-வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் ஏனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+